பக்கம்:தொழில் வளம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேலாட்சி(Management)

131


கும் வசதிகள் தேவையான வசதிகளை விட எந்த அளவு அதிகம் எனத் தெரிந்தால் அந்த அளவிற்கு மேலும் மற்றப் பொருள்களை உற்பத்தி செய்யத் திட்டமிட வாய்ப்பு ஏற்படுகின்றது. இதன் பலன் அதிகப்படியான வசதிகள் வீணாகாமல் தடுத்து உற்பத்தித்திறனை அதிகமாக்குவதே ஆகும். மேலும் பொருள் உற்பத்தியைத் திட்டமிடும் பொழுது இயந்திர அமைப்புகள் நடுவில் கெட்டுப் போவது, ஆட்கள் எதிர்பாராத விதமாக நின்று போவது போன்றவைகளையும் கவனித்து அதற்குத் தகுந்த அளவில் வசதிகளைப் பெருக்க வேண்டிவரும். நிற்க, இந்தப் பகுதியில் தயாரிக்கும் திட்டங்களில் இருந்தே என்னென்ன பொருள்கள் எந்தெந்தக் காலங்களில் தேவைப்படும் என்றும், என்னென்ன அளவில் அவைகள் வாங்கப் பெறவேண்டும் என்றும் நன்கு தெரியும். ஒவ்வொரு பகுதி வேலையையும் எவ்வெப்பொழுது ஆரம்பிக்க வேண்டுமென்பதும் எப்பொழுது முடிக்கவேண்டுமென்பதும் இதிலிருந்து நன்கு புலப்படும். அவ்வப்பொழுது திட்டத்தையும், செயல்பட்டுவரும் உற்பத்தியையும் ஒப்பிட்டுப் பார்த்து இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் எவை என்றும், அவ்வாறு ஏற்படக் காரணங்கள் என்ன என்றும் உடனடியாய்க் கண்டு வேண்டுவன்தச் செய்வதால் திட்டங்கள் எதிர் பார்த்த முறையில் நிறைவேறுவதும், எதிர்பாராத விரயங்கள் ஏற்படுவதைத் தடுப்பதும் சாத்தியமாகிறது. இத்திட்டங்கள் இல்லாமல் ஒரு நிறுவனத்தில் பொருள் உற்பத்தியைச் செய்ய முடியாதா என்ற கேள்வி எழுவதும் இயல்பே. அவ்வாறு திட்டங்கள் இல்லை என்றால் எந்தெந்த வழிகளில் விரயங்கள் ஏற்பட வகையுண்டு எனச் சிந்திப்பதும் நல்லதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/134&oldid=1381901" இலிருந்து மீள்விக்கப்பட்டது