பக்கம்:தொழில் வளம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தொழில் வளம்


நல்லுறவுடன் அன்றாட வேலைகளைக் கவனித்துச் செவ்வனே நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தவனா என்றெல்லாம் கண்டுபிடித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களிடம் இருந்து வாங்கும் விண்ணப்பம் மூலமும், நேரில் வரச் சொல்லி அவருடன் சில நேரம் பேசுவதன் மூலமும் அவரைப் பற்றி நன்கு அறிய வகை செய்ய வேண்டும். இவ்வாறு அறிந்து அவர்களைத் தேர்ந்தெடுத்த பின் வேலைக்குத் தகுந்தாற் போல் அவர்களுக்கு நல்ல பயிற்சியும் அளிக்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் நல்ல அனுபவம் வாய்ந்த அலுவலர்கள் இப்பகுதியில் இருக்க வேண்டும். மேலை. நாடுகளில் உலகப்போர்களின் போது நிறையத் தொழிலாளர்கள் வேண்டியிருந்தபோது முன் அனுபவம் இல்லாத தொழிலாளர்களைத் தேர்ந்தெடுத்து அவரவர் தொழிற் கூடத்திலேயே வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் வேண்டிய பயிற்சியை முறையே கற்றுக் கொடுத்தனர். இதனால் பலவித நன்மைகளும் முன்னேற்றமும் அவர்கள் அடைந்ததைக் கண்டு நாட்டிலும் அதேபோன்று தொழிலாளர்களுக்கான பயிற்சியைத் தொழிற் கூடங்களிலேயே கொடுக்க நம் அரசாங்கத்தினரும், உற்பத்தித் திறனில் அக்கறை கொண்டவரும் தீவிர நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகின்றனர். இதை ஆங்கிலத்தில் Training within the Industry என்று அழைக்கிறார்கள்.

ஒவ்வொரு தொழிலாளியையும் பயிற்சி பெற்ற பின் அவரவர்க்குத் தகுந்த வேலையில் அமர்த்த வேண்டும். இவ்வாறு செய்வதற்கு முன் அந்தத் தொழிற்கூடத்தில் உள்ள எல்லா வகை வேலைகளையும் பல தரங்களாகப் பிரித்து அமைக்க வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/143&oldid=1400218" இலிருந்து மீள்விக்கப்பட்டது