பக்கம்:தொழில் வளம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி(Management)

139


தகுந்த முறையில்: பணியாற்றுவார்கள் என்பது உறுதி.

இது வரை தொழிற்கூடத்தை நன்கு நடத்த மேலாட்சியினருக்கு உதவும் முக்கிய மூன்று பகுதிகளைப் பார்த்தோம். அவை எவ்வளவு முக்கியமெனக் கண்டோமோ அவ்வளவு முக்கியமானது பணியாளா பற்றிய பகுதி. தொழிலாளர் இல்லாமல் நாம் எவ்வளவுதான் பொருளீடும் மற்ற வசதிகளும் செய்தாலும்,அவை பயனளிக்க முடியாது. ஆகவே எல்லாவற்றினும் முக்கியமானதெனவே இப்பகுதியைக் கருதலாம். மேலாட்சியினருக்கும் தொழிலாளருக்கும் நடுவில் நல்லுறவை ஏற்படுத்தித் தொழிற் கூடம் நன்கு செயலாற்ற வகை செய்வது. இந்தப் பகுதிதான். முன்பு கூறியதுபோல் உயர் மேலாட்சியினர் நல்ல.மனித உறவைக் கடைப்பிடிக்க வகை செய்ய இப்பகுதியிலுள்ளோரையே எதிர் பார்க்க வேண்டும். தொழிலாளர்கள் எல்லோரும் தாம் உழைக்கும் அந்தத் தொழிற் கூடம்,தங்களுடையது போலவே கருதி விரயங்களைக் குறைத்து, லாபம் அதிகம் பெறச்செய்ய வகை செய்வது இந்தப் பகுதிதான். ஆகவே இந்தப் பகுதி எந்தெந்த வகையில் எவ்வாறு செயலாற்றுகிறது என்று சுருங்கக் காணலாம்.

இவ்வரிசையில் முதலில் நிற்பது, தகுதியான தொழிலாளர்களைத் தேர்ந்தெடுப்பது. இது. மிகச் சிக்கலான முக்கியமான வேலை. வேலைகளின் தகுதிக்கு ஏற்றாற்போல், தகுந்த அறிவு, பண்பு, திறமை, அனுபவம் முதலிய இருக்கின்றனவா? தொழிற் கூடத்தில் உள்ள மற்றவருடன் கூட்டாக ஒன்று சேர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/142&oldid=1381933" இலிருந்து மீள்விக்கப்பட்டது