பக்கம்:தொழில் வளம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

தொழில் வளம்


னத்தையே அதிகப்படுத்தும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளது மிகவும் வருத்தப்பட வேண்டிய செய்தி ஆகும். இப் பகுதிக்காக எவ்வளவு செலவானாலும், இப்பகுதி மேலாட்சியினருக்கு எங்கெங்கே குறைபாடுகள் உள்ளன. எனத் தெள்ளத் தெளிய எடுத்துக் காட்டி அதன் பலனாக விரயங்களைக் குறைத்துச் செலவைக் கட்டுப்படுத்தி இலாபத்தைப் பலபங்கு அதிகரிப்பதைக் காணும்போது இப் பகுதியும், அதற்காக அமைக்கப்படும் அலுவலகத்தாரின் முக்கிய நிலையும் நன்கு விளங்கும். இப் பகுதியில் பணியாற்றும் அதிகாரிகள் (Cost Accountants), உயர் மேலாட்சியினருக்கு மட்டும் இன்றித் தொழிற்கூட்டத்தில் படிப்படியாக உள்ள அதிகாரிகள், அலுவலுகத்தவர்கள், மேற்பார்வையாளர்கள், தொழிலாளர்கள் போன்ற எல்லா நிலையினருக்கும், அவரவர்களுக்கு வேண்டிய அளவிலும் வகையிலும் அன்றாடச் செயல்பாட்டுத் திறனை விளங்கவைக்கச் செய்திகள் கொடுக்க முடியும். இவ்விதச் செய்திகள் கிடைக்கும் பொழுது, நிர்வாகத்தில் உள்ள ஒவ்வொரு வரும் தம் தம் நிலையில், தங்கள் பொறுப்புக்கும் ஆதிக்கத்துக்கும் உட்பட்ட எல்லையில் என்ன நடந்துள்ளது என அறிய முடிகிறது. உடன் அவற்றிற்குக் காரணம் கண்டு உயர் மேலாட்சியினர் அதிகார பூர்வமாய் நடவடிக்கை எடுக்கும் முன்பே அவர்களின் ஆணைகளுக்குக் காத்திருந்து காலத்தை வீணாக்காமல் ஆவன செய்து நிலைமையை முன்னேற்றமுள்ளதாகச் செய்ய இப் பகுதி பெரும் அளவில் துணையாக அமைகின்றது. இவ்வித நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின் அந்தத் தொழிற்கூடத்தில் எவ்விதக் குறையும் இல்லாமல் எல்லாரும் மனநிறைவோடு நிர்வாகத்தில், முழு அளவில் பங்கு கொண்டு. சமூகத்திற்கும், நாட்டிற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/141&oldid=1381927" இலிருந்து மீள்விக்கப்பட்டது