பக்கம்:தொழில் வளம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி(Management)

137


பராமரிப்புபட்ஜெட்,தொழிலாளர் நல பட்ஜெட் இயந்திர வசதிகள் பட்ஜெட் முதலியனவாகும்.

பட்ஜெட் திட்டங்கள் இப்படி இருக்க நாம் உற்பத்திச் செலவுக் கட்டுப்பாட்டைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்வது அவசியம். இந்த முறை இல்லாமல் போனால் பட்ஜெட்திட்டங்கள் ஏதும் வெற்றிகரமாக நடத்தப்பட முடியாது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வரவு, செலவு மற்றும் இதர செயல்களின் புள்ளிகளின் விவரங்களில் இருந்தே வ்ரும் ஆண்டு அதே இனங்களில் எந்தெந்த வகையில் மாறுதல்கள் ஏற்படும் என்று முன்கூட்டியே பட்ஜெட் திட்டங்கள் வகுக்க முடிகின்றது. . இப் புள்ளி விவரங்களைச் சரியாகக் கணக்குப்படி எல்லா நிலைகளிலும் எழுத்து மூலமாய்க் கொண்டு வராவிடில் தொழிற்கூடத்தின் ப்ல்வேறு பகுதிகளிலும் பல துறைகளும் எவ்வாறு செயல்படுகின்றன் என உயர் மேலாட்சியினர் அலசிப் பார்க்க முடியாது போய்விடும். இப்புள்ளி விவரங்களில் இருந்தே எந்தத் துறை எந்தப் பகுதி எக்காரணத்தினால் நல்ல திருப்திகரமான முறையில் செயல்பட வில்லை என உடனே அறிய முடிகிறது. இதை அக் காலத்துக்குரிய பட்ஜெட்டுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் காரணமும் எளிதில் விளங்கும். இந்த உற்பத்திச் செலவுக் கட்டுப்பாடு பலவகைகளிலும், முறைகளிலும் தொழிற்கூடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதற்கெனத் தனித் தொழிற் படிப்புக்களும் வகுப்புக்களும் பல்கலைக் கழக நிலையில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இருபதாம் நூற்றாண்டிலும் பல தொழிலதிபர்கள் இந்த பட்ஜெட், உற்பத்திச்செலவு,கட்டுப்பாடு இவைகளைக் கையாளுவ்தில் ஒரு பலனும் இல்லை, செலவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/140&oldid=1381920" இலிருந்து மீள்விக்கப்பட்டது