பக்கம்:தொழில் வளம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

தொழில் வளம்


வில் பலவகைளில் முன்னேற்றம் அடைந்திருப்பதையும் பட்ஜெட் முறைகளைக் கடைப்பிடிக்காத தொழிற் கூடங்களில் பெரும்பாலனவை பெருவாரியான நஷ்டங்கள் ஏற்பட்டு நசிந்து போயிருப்பதையும் காணலாம். முன்னதில் அத்தொழிற்கூடங்கள் உழைப்போரின் வருங்காலம் சிறந்து விளங்க, பின்னதில் குறித்த தொழிற்கூடங்களில் செயலாற்றுவோரின் வாழ்க்கைத் தரம் முதலியன திருப்திகரமாக அமைய முடியாமல் போவதும் இயல்பே. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவ்ர்கள் செயல்படுத்தும் அலுவலகத்தவரோ அல்லது தொழிலாளிகளோ அல்லர். ஆனல், தொழிற்கூடத்தை மேல் இருந்து குறிகோள்களை உண்டாக்கி நிர்வகிக்கும் உயர் மேலாட்சியினரே ஆவர் என்பதை நாம் மறக்கவே கூடாது.

முழு பட்ஜெட் பின்பு பெரும்பகுதி பட்ஜெட்டுகளாகவும் அவை, மறுபடியும் சிறுசிறுபகுதி பட்ஜெட்களாகவும் பிரிக்க்ப்படுகின்றன எனக் கண்டோம். இப் பெரும் பகுதி பட்ஜெட்கள் எந்தெந்தப் பகுதிகளாக அமையும் என்பதைக் காட்ட சில பகுதிகளைக் காண்பது நல்லது. ஒரு தொழிலகத்தில் முதலீடு, தொழிலாளரின் எண்ணிக்கை, உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் இன்னும் பல்வேறு இனங்களைப் பொறுத்து பல அலுவலகப் பகுதிகள் ஏற்படுத்தவேண்டி இருக்கும். அவ்வாறு உண்டாகும் பகுதிகளுக்கெனத் தனித்தனி பட்ஜெட்டுகள் தயாரிக்க வேண்டியது அவசியமாக அமைகின்றது. அவ்வாறு உண்டாக்கப்படும் பெரும்பகுதி பட்ஜெட்டுகளில் முக்கியமான சில:-விற்பனை பட்ஜெட், உற்பத்தி பட்ஜெட், செலவினங்கள் பட்ஜெட், இயந்திர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/139&oldid=1400217" இலிருந்து மீள்விக்கப்பட்டது