பக்கம்:தொழில் வளம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மேலாட்சி (Management)

35



நிறைவான முறையில் நடைபெற வகை ஏற்படுகின்றது.

6. அந்தந்தப் பகுதியில் உள்ளவர்கள் மேலே கூறிய பலன்களால் உடனுக்குடன் தெளிவாக எண்ணிப் பார்க்கவும் குறிக்கோள்களை அடைவதற்காகச் செயல்பாட்டு முறையை வேண்டிய வகையில் தன்னம்பிக்கையுடன் மாற்றி அமைக்கவும் முடிகின்றது.

இவையெல்லாவற்றாலும், வருங்காலத் திட்டங்களை ஐயமின்றியும், கால தாமதம் இன்றியும், தவறுகள் இன்றியும், செயல்படக் கூடிய திட்டங்களாக அமைக்க வேண்டிய அனுபவத்தை உண்டாக்குகின்றது.

பொதுவாக, பட்ஜெட்டுகளின் காலவரம்பு ஓர் ஆண்டாக இருக்கும். ஒரு சில தொழிற்கூடங்களில் வரப் போகும் ஆண்டுக்கு பட்ஜெட் தயாரித்து மாதாமாதமோ அல்லது ஆண்டு இறுதியிலோ செயல்பட்டதற்கும், பட்ஜெட்டுக்கும் உள்ள வித்தியாசங்களைக் கண்டு வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. வேறு சில தொழிற்கூடங்களில் ஓர் ஆண்டுக்கென பட்ஜெட் தயாரித்து மூன்று மாதத்துக் கொருமுறை பரிசீலனை செய்து திருத்தத்துடன் அந்த நாளில் இருந்து ஓர் ஆண்டு, பட்ஜெட் தயாரிக்கப்படுகின்றது. இப்படியே ஒவ்வொரு கால் ஆண்டு இறுதியிலும் பரிசீலனையும் ஆண்டு பட்ஜெட்டும் தயாரிப்பு ஆகின்றது. கடந்த கால அனுபவத்தையொட்டிப் பார்த்தால், இம்மாதிரியான பட்ஜெட் திட்டங்களை முறையாகக் கையாண்டு வந்த தொழிற்கூடங்கள், எல்லாம் குறுகிய கால அள-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/138&oldid=1399823" இலிருந்து மீள்விக்கப்பட்டது