பக்கம்:தொழில் வளம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

134

தொழில் வளம்



இவ்வாறு மூன்று பட்ஜெட்டுகள் ஒரு தொழிற் கூடத்தில் ஏற்படுத்திக் கொண்டு செயல் படுத்துவதால் உண்டாகும் நன்மைகள் :-

1. அத் தொழிற்கூடத்தில் முதலீடு செய்தவர்வர்களும் உயர் மேலாட்சியில் உள்ளவர்களும் எதிர்பார்க்கும் பலன்களை நல்ல முறையில் விளங்கும்படியான வரையறுக்கப்பட்ட திட்டங்களாகவும், குறிப்பிட்ட குறிக்கோள்களாகவும் அந் நிர்வாகத்தில் பங்கு கொள்பவர்களுக்கும், செயலாற்றுபவருக்கும் தெள்ளத் தெளிய எடுத்துக் காட்டுகின்றது.

2. அந்தந்தத் தொழிற்கூடத்தின் பல பகுதிகளும் ஒரே பொதுவான குறிக்கோளுக்காக ஒருசேர அனுசரித்துச் செயல்பட ஏதுவாகிறது.

3. அந்தந்தப் பகுதியும் திறம்படச் செயல்பட்டு இருக்கின்றனவா எனப் பட்ஜெட்டையும், செயல்பட்டதின் விளைவாக ஏற்பட்ட பலனையும் ஒப்பிட்டுப் பார்த்து, கட்டுப்படுத்திக் கொள்ள முடிகிறது.

4. இந்தப் பட்ஜெட் திட்டங்கள் போடுவதால்வருமானத்தையும் செலவையும் கூடுமானவரை சரியாக முன் கூட்டியே திட்டவட்டமாகக் கூற முடிகிறது.

5. அதுமட்டும் இன்றிப் பணம் எந்தெந்த அளவில் எந்தெந்தக் கால அளவில் எந்தெந்தச் செலவினங்களுக்காகத் தேவைப்படும் என்று அறிய முடிவதால் செயல்படும் காரியங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/137&oldid=1399822" இலிருந்து மீள்விக்கப்பட்டது