பக்கம்:தொழில் வளம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி(Management)

133


ஒரு தொழிற் கூடம் எல்லா விதத்திலும் நல்ல முறையில் நடக்க உபயோகமாகும் கருவிகளில், மூன்றாவதாக முக்கியமானது (cost and budgetary control) என்பதாகும். இது ஒவ்வொரு தொழிலகத்திலும் உற்பத்தி செய்யும் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் (cost control) ஒரு குறிப்பிட்ட கால அளவில் நிறைவேற வேண்டியவைகளுக்காக எவ்வளவு மூல தனம் ஒதுக்கப்பட வேண்டும், எவ்வெவ்வழிகளில் எந்த அளவு செலவு ஏற்படும் என்பதை முன் கூட்டியே திட்டமிட்டு (budget) அந்தக் கால அளவு முடிந்ததும் கடந்ததையும், திட்டமிட்ட பட்டியலையும் (budget) ஒப்பிட்டுப் பார்த்துத் தொழிற்கூடம் எவவகையில் நடந்தேறி வந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவும் மிகவும் பயன்படுகிறது.

பட்ஜெட் என்பது அந்தந்த வியாபாரத்தின் குறிக்கோள்களை விவரமாய்ப் பகுதி பகுதிய்ர்கப் பிரித்து அந்தக் கூடத்தின் நடவடிக்கைகளை தனது திட்டத்திற்குத் தகுந்தவாறு செயல்படுத்துவதே ஆகும். இந்தப் பட்ஜெட்டில் மூன்று வகைகள் பொதுவாகக் காணப்படும். 1. வியாபாரத்தின் முழு பட்ஜெட் 2. இம் முழு பட்ஜெட் அவ்வியாபாரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் உண்டான பெரும் பகுதி பட்ஜெட்டுகளால் ஆக்கப்படுகின்றது. 3. மேலும் இந்த ஒவ்வொரு பெரும் பகுதி பட்ஜெட்டும், அந்தந்தப் பகுதிகளில் செயல்படுத்தப்படும். எல்லாச் செயல்களுக்கும் விரிவான சிறுபகுதி பட்ஜெட்டுகளால் ஆக்கப் படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/136&oldid=1400216" இலிருந்து மீள்விக்கப்பட்டது