பக்கம்:தொழில் வளம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

தொழில் வளம்


யறிவு அனுபவம், உடல் வலிவு இவைகளைப் பட்டியலுக்குத் தகுந்தவாறு பிரித்துப் பொருத்துவார்கள். அப்படிப் பொருத்தப்பட்ட்வருக்கு அந்த வேலையின் மதிப்பான் விலையை அவருக்கு ஊதியமாக அமைப்பார்கள் இவ்வாறு அமைத்துப் பின் அதிக மதிப்புள்ள வேலை ஒன்றிற்கு ஆள் தேவைப்ப்டும்போது, கீழே உள்ளவர்களுக்கு உயர்வு கொடுக்க வகை உண்டாகிறது. ஒவ்வொரு தொழிற் கூட்த்திலும் இந்த முறையைக் கையாண்டால் அநேக சிக்கல்கள் தாமாகவே தீர்ந்துவிடும். ஆனால் இம்முறை புதியதாக ஆரம்பிக்கப்படும் தொழிற் கூடங்களில் மட்டும் தான் சிரமம் இன்றி உடனடியாக அமுல் படுத்த முடியும். ஏற்கனவே கடந்து வரும் தொழிற் கூடங்களில் இம் முறை புகுத்தப் பட வேண்டுமென்றால் பலவித எதிர் பாராத இன்னல்கள் இருக்கத்தான் செய்யும். ஒர் அளவிற்கு விதியை விட்டு இடத்திற்குத் தகுந்தாற்போல் வேலைகளின் தரங்களை மாற்றி அமைத்துக் கூடுமான வரை ஒழுங்கு செய்யத்தான் வேண்டி இருக்கும்.

அடுத்ததாக, வேலைகளின் மதிப்பைக் கணக்கெடுத்துத் தரப்படுத்தியது போன்றே, தொழிலாளர்கள் செயலாளர்களையும், ஒவ்வோர் ஆண்டும் மதிப்பிடத் தேவையாகிறது. ஒவ்வொரு வேலைக்கும் ஒரு விலையை நிர்ணயித்து அதில் ஒரு தொழிலாளியைப் போட்ட பின்பு ஆண்டு தோறும் ஊதிய உய்ர்வு கொடுக்கிறோம். இந்த உயர்வுக்கும் வேலையின் தரத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் கிடையாது. அவ்வேலையைச் செய்யும். நபரின் தன்மை, நேர்மை, ஊக்கம், பொறுப்பு போன்றவைகளைக் கண்டு அவரவர்க்குத் தகுந்த படி முறையாக உயர்வு கிட்ட வகை செய்வது அவசியம். இதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/145&oldid=1381952" இலிருந்து மீள்விக்கப்பட்டது