பக்கம்:தொழில் வளம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி (Management)

143


ஆங்கிலத்தில் (Merit rating) என்பர். இம்மாதிரிச் செய்வதால் என்றும் நிலையான ஒரு எழுத்துப்பிரதி (record) ஏற்படுகிறது. ஒரு தொழிலாளிக்கும் மற்றத் தொழிலாளிக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக எல்லோருக்கும் தெரிகிறது. உயர்வு கிடைக்காதவர்கள் தங்களுக்கு ஏன் கிடைக்க வில்லை எனக் கண்டு அறிந்து மறு ஆண்டு வேண்டிய பண்புகளை, அடைந்து தங்களைத் திருத்தி அமைத்துக் கொள்ள முடிகிறது. தொழிலாளிகளுக்கு மேல் உள்ள மேற்பார்வையாளர்கள், மற்றும் இதர மேலாட்சியினர் தங்கள் விருப்பப்படி விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுத்து, தவறான முறையில் உயர்வைத் தொழிலாளர்களுக்குள் மனக் கசப்பையும் வித்தியாசத்தையும் உண்டு பண்ணும் வழியில் கொடுத்து தொழிற் கூடத்தின் ஒழுங்குக் கட்டுப்பாட்டையும், நல்லுறவையும் கெடாதபடி தடுக்க மிகவும் உதவுகிறது. இதனால் நிர்வாகத்தில் உள்ள பல் வேறு நிலையில் இருக்கும் மேலாட்சியின்ர் அலுவலர், மேற்பார்வையாளர்கள், தொழிலாளிகள் எல்லோரும் தாம் தாம் எந்தத் தகுதி பெற்றுள்ளார்கள் என நன்கு அறிந்து, பழகும் முறை, உறவு இவைகளில் மென்மேலும் நல்ல முறையில் பின்னிப்பிணைந்து தொழிற்கூடத்தின் விரயங்களைக் குறைக்க வழி செய்து திறத்தை அதிகரிக்கின்றது.

இப்பகுதி செயலாற்றும் முறையில் அடுத்த முக்கிய செயல்-ஊதியம் அளிக்கும் முறையும் ஊக்குவிக்கும் கருவிகளும் (Incentives) ஆகும். நமக்குத் தெரிந்த அளவில் அநேகமாய் எல்லாத் தொழிற்கூடங்களிலும் ஊதியம் மாதம் ஒருமுறை கொடுப்பதும்,:ஆண்டுக்கு ஒருமுறை ஊதியம் உயர்வு பெறுவதும் சாதாரணமாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/146&oldid=1381959" இலிருந்து மீள்விக்கப்பட்டது