பக்கம்:தொழில் வளம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

தொழில் வளம்


நடந்து வருகிறது. ஆனால், மேலைநாடுகளில் இதைத் தவிர வேறு முறைகளையும் கையாண்டு வருகின்றனர். போனஸ் முறை என்பது ஒருவகை. உருப்படி விலை அல்லது உருப்படி மதிப்புக்கண்க்கு (Piece rate) என்பது இரண்டாவதுவகை இந்த ஒவ்வொரு வகையிலும் அந்தந்தச் சூழ்நிலைக்குத் தகுந்த அளவில் வேண்டிய அளவு மாற்றங்கள் செய்து பழக்கத்தில் கையாளுகிறார்கள்.

ஒரு மனிதன் ஏன் ஒரு தொழிலுக்குப் போக வேண்டும் என்ற கேள்வியைக் கேட்கும்போது உடனே நமது நினைவிற்கு வருவது வயிற்றுப் பிழைப்புக்கு ‘ என்பதுதான். இது முற்றிலும் உண்மை. இதைச் சிறிது ஆராய்ந்தால், நாம் முன்பு கூறியபடி மனிதனுக்கு உயிர் வாழ வேண்டியவை அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இடம். வாழ்க்கைத்தரம் என்பன ஒவ்வொருவனும் தனக்கு வேண்டிய விரும்பிய வசதி களைச் செய்து கொள்ளும் திறமை எனவும் கண்டோம். இவைகளை அடைய வழி கையில் பணம் வைத்திருப்பது. ஆகவே, எவன் ஒருவனிடம் பணம் இருக்கின்றதோ அவன் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் தன்னிடம் உள்ள பணத்தையொட்டி முடிந்த வசதிகளைச் செய்து கொள்ள முடியும், இதைக் கொண்டு எல்லாத் தொழிலாளிகளும் பணம் ஒன்றே என்றகருத்தில் வேலை தேடி வருவதாய்க் கொள்ளவும் முடியாது. செய்யும் வேலை, வேலை முறை, பக்கத்தில் உடன் உழைப்பவர், தங்களை மேற்பார்வை செய்யும் மேற்பார்வையாளர், மற்றவர், இவர்களுடன் ஏற்படும் தொடர்பு, உறவு மனப்பான்மை மேலாட்சியினரின் குறிக்கோள்கள்' மேலாட்சியினர் தங்களை நடத்தும் முறை, வேலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/147&oldid=1382256" இலிருந்து மீள்விக்கப்பட்டது