பக்கம்:தொழில் வளம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

தொழில் வளம்


பற்றிய வெறுப்புணர்ச்சியும் மாறுபட்ட கருத்துக்களும் உண்டாகின்றன.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் தமிழ் மக்கள் பலவற்றை எதிர்பார்த்தனர். விழும்புரம் வரையில் மின்சார ரெயில் வசதி, சேலம் இரும்புத் தொழிற்சாலை, தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுகம், சேது சமுத்திரத் திட்டம், சில சிறு துறை முகங்களின் விஸ்தரிப்பு, சில புதிய தொழில்களுக்கு வாய்ப்பு, காவிரிநாட்டு எண்ணெய் வள ஆய்வு போன்ற பலபெரும் வளர்ச்சிகளை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவை ஒவ்வொரு திட்டத்திலும் எடுக்கப் பெற்றதாகச் சொல்லப் பெறுகின்றனவே ஒழியச் செயல்படவில்லை. இவற்றுள் ஒரு சில இந்த மூன்றாவது திட்ட காலத்தில் கட்டாயம் நிறைவேற்றப் பெறும் என்று இன்றைய ஆட்சியாளர் உறுதி கூறுகின்றனர். திட்ட அடிப்படையில் பெருகி வளரும் ஒரு காட்சியை நெய்வேலியிலேயே காண்கின்றோம். சேலம் இரும்பு உருக்கு ஆலை தொழிற்படத்தக்க நம்பிக்கை உண்டு என்பதை இன்றையப் பெருந்தொழில் அமைச்சர் திரு. சுப்பிரமணியம் அவர்தம் அறிக்கையில் அறிகிறோம். எனவே நாட்டில் எத்தனை இயற்கை வளமிருந்தாலும் அரசாங்கத்திட்டமே முதல் அடிப்படையாக அமைகின்றது என்பதை நாம் உணர்தல் வேண்டும். இன்றைய அரசாங்கம் மச்கள் அரசாங்கமாக இருப்பதால் மக்கள் மனமறிந்து தமிழ் நாட்டுக்குத் தேவையான பெருந்தொழில் சிறு தொழில்களை வளர்க்கும் பணியில் ஆட்சியாளர்கள் பின்னடைவார்களானால் அடுத்த தேர்தலில் மக்கள் மனம் மாறும் என உணர்ந்து தக்க வகையில் அவர்கள் செயலாற்றுவார்களென எதிர்பார்க்கலாம். எனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/159&oldid=1382025" இலிருந்து மீள்விக்கப்பட்டது