பக்கம்:தொழில் வளம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளர்ச்சிக்குரிய அடிப்படைகள்

155


மியற்றிச் செயல் புரிந்து முன்னேற்றம் கண்டுவரும் ரஷ்யா போன்ற நாடுகள் இன்று உலக அரசுகளில் சிறந்த வல்லரசுகளாக விளங்குவதைக் காண்கின்றோம். எனவே எல்லாவற்றிற்கும் திட்டங்கள் தேவை. வீட்டிலிருந்து நாட்டு ஆட்சி வரை திட்டங்களே செம்மையாகத் தொழில்பட உதவுவன. ‘எண்ணித் துணிக கருமம்’ என்று வள்ளுவர் எதையும் எண்ணி உணர்ந்து திட்டமிட்டே செயலாற்ற வேண்டுமென வற்புறுத்துகின்றார். எனவே, எல்லாச் சிறப்புகளுக்கும் திட்டம் அடிப்படை. தமிழ் நாட்டில் - இந்திய நாட்டில் தொழில் வளத்துக்கு அடிப்படைக் காரணம் திட்டங்களேயாம். இத் திட்டங்களின் அடிப்படைகளைப் பற்றி வாய்ப்பு உளதேல் வேறு தனியாகக் காணலாம்.

திட்டங்கள் தொழிலியல் அடிப்படையாயினும் இத்திட்டங்களை உருவாக்கவும், தொழிற்படுத்தவும் அரசாங்க ஆக்கமே முதல் அடிப்படையாகும். பரந்த பாரதத்திற்கு இணைந்த திட்டங்களே தீட்டப் பெறுகின்றன. இமயந் தொடங்கிக் குமரிவரையிலிருக்கும் பல்வேறு மாநில மக்களின் மனநிறைவுக்கு ஏற்ற வகையில் திட்டம் தீட்டப் பெறுதல் வேண்டும். திட்டக்குழுவினரிடம் இந்த ஆராய்ச்சிகளையெல்லாம் ஒப்படைத்துள்ளார்கள். அவர்களும் பல்வகைகளில் ஆராய்ச்சி செய்து திட்டங்களைத் தயாரிக்கின்றனர். இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் முடிந்து மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் நாம் நிற்கின்றோம். இவ்வாறு திட்டங்கள் தீட்டப் பெறும்போது எல்லா மாநிலங்களுக்கும் ஏற்ற வகையிலோ, அன்றி மன நிறைவு கொள்ளும் வகையினாலோ திட்டம் தீட்டமுடிவதில்லை. எனவே நாட்டில் சில பாகங்களில் திட்டங்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/158&oldid=1382019" இலிருந்து மீள்விக்கப்பட்டது