பக்கம்:தொழில் வளம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

தொழில் வளம்


சார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு அடிவிட்டு ஒதுங்கி விட்டனர். எனவே பாரதி கண்ட எல்லாரும் இந் நாட்டு மன்னர் என்ற கனவு அவன் செத்துக் கால் நூற்றாண்டுக்குப் பின்னே பலித்தது. அவன் இட்ட விதையில் தோன்றிய மரத்தின் கனிகளை நாம் நுகர்கின்றோம். நம் நாட்டில் மக்கள் ஆட்சி மலர்ந்தால் எந்தெந்த வகையில் தொழில் வளம் பெறும் என அவன் எக்காளமிட்டுப் பாடுகின்றான்.

குடைகள் செய்வோம் – உழு – படைகள் – செய்வோம்
கோணிகள் செய்வோம் – இருப்–பாணிகள் செய்வோம்
நடையும் பரப்புமுணர் வண்டிகள் செய்வோம்

ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம்’

என்றும் இன்னும் பலவாறாகவும் அவன் கண்ட கனவே பிரம்பூர் ரெயில் பெட்டித் தொழிற்சாலையாய், விசாகை கப்பற் கட்டும் தளமாய், பெங்களூர் விமானத் தொழிற்சாலையாய், பிலாய் உருக்காலையாய், சித்தரஞ்சன் எஞ்சின் தொழிற்சாலையாய், நெய்வேலி கரிச்சுரங்கமாய், ஆவடி ஆணித் தொழிற் சாலையாய் இன்னும் பல்வேறு வகையாய் உருப்பெற்று இன்று நனவாக நமக்குக் காட்சி தருகின்றன.

ஒரு நாடு நலல் தொழில் வளம் பெற்றதாக விளங்க வேண்டுமானால் அதற்கு அந்நாட்டு ஆட்சியே மூலகாரணமாக அடிப்படையாக அமைகின்றது. பரந்த பாரத நாட்டிலும் நம் தமிழ் நாட்டிலும் நாமே நம்மை ஆண்டு கொள்ளும் மக்களாட்சி மலர்ந்துள்ள காரணத்தால் எல்லா மக்களும் தொழில் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளார்கள். விடுதலை பெற்ற சில ஆண்டுகளுக்குள்ளாக ஐந்தாண்டுத் திட்டங்களை அரசாங்கம் தீட்டிற்று. இவ்வாறு ஏழாண்டுத் திட்ட-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/157&oldid=1382015" இலிருந்து மீள்விக்கப்பட்டது