பக்கம்:தொழில் வளம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளர்ச்சிக்குரிய அடிப்படைகள்

153


பல்வேறு தொழில் துறைகளில் சிறந்த முன்னேற்றம் கண்டிருக்கும் நாடுகளை இன்றும் நாம் உலகில் கண்டு போற்றுகிறோம். அவற்றின் வளர்ச்சிக்குக் காரணம் மக்கள் உழைப்பும் உறுதியுமேயாம். ஆசிய, நாட்டின் கீழ்க் கோடியிலுள்ள சிறு ஜப்பான் தீவும் இரு போர்களால் இல்லையோ என்னுமாறு அழிவுற்ற ஜெர்மனி நாடும் எப்படித் தொழில் வளத்தில் முன்னேறின என்பதை நினைக்க நமக்குப் பெருவியப்பாக இல்லையா? நாட்டு எல்லை சிறியதாயினும் மூலப் பொருள்கள் அரியதாயினும் அந்நாட்டு மக்களது மூளையும் உடலும் ஒரு சேரத் தொழில்படத் தொடங்கின் அந்த நாட்டின் உயர்வை யாராலே கணக்கிட முடியும்? இதைத்தான் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப் புலவர் விளக்கிச் சொல்லிவிட்டுச் சென்றார். நாட்டு மக்கள் எந்தவகையில் செயல் திறனும் உள உரமும் பெற்றவர்களாக உள்ளார்களோ அவ்வழியிலேயே அந்த நாடு பெயர் பெற்று ஓங்கும் என்பதே அவர்தம் அடிகளின் பொருள். இதில் ‘ஆடவர்’ என்று ஆணினத்தை மட்டும் குறித்தாலும் பெண்டிரையும் அந்த எல்லையில் அமைத்தே அவ்வாறு சொல்லியுள்ளார். தமிழில் அவ்வாறு சொல்லுவதற்கு ‘ஒரு மொழி ஒழிதன் இனம் கொளற்கு உரித்தே’ என்ற இலக்கணம் இருக்கின்றதல்லவா!

தொழில் வளத்துக்கு நாட்டு மக்களே அடிப்படைக் காரணமாவார்கள் என்று கண்டோம். இன்று இந்தியாவில் மக்கள், உணர்ச்சி பெற்றுள்ளார்கள். அதற்கேற்ப, மக்களாலே அமைக்கப் பெற்ற அரசாங்கமே இன்று நாட்டில் தொழிற்படுகின்றது. தனியாட்சியோ அல்லது அடிமை வாழ்வோ இன்று நாட்டிலில்லை. முடி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/156&oldid=1382007" இலிருந்து மீள்விக்கப்பட்டது