பக்கம்:தொழில் வளம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

தொழில் வளம்


நாட்டில் உள்ள இயற்கை அமைப்பும், அதன் சூழலில் அமையும் பல மூலப்பொருள்களும் தொழில் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. பரந்த பாரதநாடு பல்வேறுவகைத் தட்ப வெப்ப நிலைகளை உடையது. என்றும் மறையாத வெள்ளிய பனிச் சிகரங்களை உடைய இமயமும் கொடிய நெருப்பை அள்ளி வீசும் கோடையை அனுபவிக்கும் தென்னாடும் இவற்றுக்கிடையில் மிக்க குளிரிலும் மிகுதியான வெப்பத்திலும் தொல்லையுட்படும் மத்திய நிலப் பகுதியும் இந்நாட்டில் உள்ளன. இந்நாட்டில் வற்றாது பெருக்கெடுத்தோடும் பேராறுகளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் ஆறுகளும் உள்ளன. பொன்சுரங்கங்களும், இரும்புக்கனிகளும், எண்ணெய்க் கிணறுகளும் நிலக்கரிச் சுரங்கங்களும், பிற உலோகச் சுரங்கங்களும் நாட்டில் பல பகுதிகளிலும் உள்ளன. இவற்றின் அடிப்படையே நாட்டின் தொழில்வளத்தின் அடிப்படைகளாக அமைகின்றன. இவை அனைத்தும் இருந்தும் மக்களோ அவர்தம் அரசாட்சியோ இவை பற்றிக் கவலைப்படாமல் இருந்தால் தொழில் முன்னேற்றம் காண்ப தெங்கே?

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே” (புறம்:187)

என்று இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னமேயே தமிழ்நாட்டுப் புலவர் ஒருவர் நாட்டுவளத்துக்கு மக்கள் தாம் காரணம் என்பதைக் சுட்டிக் காட்டிச் சென்றுள்ளார். வற்றாத வளம் பெற்ற நாடாக இருந்தாலும் அந் நாட்டு மக்கள் சோம்பித்திரிபவர்களாக இருப்பார்களாயின் அந்த நாடு எந்தத் துறையிலும் முன்னேற முடியாது. வளங்கள் குறைந்திருக்கும் நிலையிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/155&oldid=1382006" இலிருந்து மீள்விக்கப்பட்டது