பக்கம்:தொழில் வளம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 
                          7 வளர்ச்சிக்குரிய அடிப்படைகள்  
      இருபதாம் நூற்றாண்டிற்கிடையில் உலகில் பல நாடுகள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்று விட்டன. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகே உலகெங்கணும் பல துறைகளில் முன்னேற்றங் காணப்படுவதாக அறிகிறோம். அவற்றுள் தொழிலியல் முன்னேற்றமும் ஒன்று. இத்தொழில் முன்னேற்றத்தில் சில நாடுகள் விரைந்து முன்னேறுவதையும் சில மெல்லச் செல்வதையும் அறிகிறோம். முன்னேற்றத்தில் வேகங்காணும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றே. உரிமை பெற்றிருந்த மேலைநாடுகளும் பிறவும் இயல்பாகவே பெற்றிருந்த முன்னேற்றத்தோடு இரண்டாவது உலகப் போருக்குப் பின் பெரு முன்னேற்றங் கண்டுள்ளன. ஆனால், அடிமை வாழ்வில் உழன்று போருக்குப் பின் வெற்றி கண்ட நாடுகளில் இந்தியா தான் தொழிலியலில் விரைந்த முன்னேற்றம் காணும் நாடு என்பது ஆய்வாளர் கருத்து. இந்த விரைவான முன்னேற்றத்திற்குரிய காரணங்கள் யாவை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/154&oldid=1400220" இலிருந்து மீள்விக்கப்பட்டது