பக்கம்:தொழில் வளம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளர்ச்சிக்குரிய அடிப்படைகள்

169


அடிக்கடி கெட்டுப் பழுது பார்க்கத் தக்க நிலையை அடைந்துவிடுகின்றன. இச்சாலை அமைப்புக்களில் மற்றொரு புதுக்கருத்திருத்தவும் தேவையுள்ளது. இன்று அமைக்கும் சாலைகளும் புதுப்பிக்கும் சாலைகளும் மிக விரிந்த அளவில் அகலமாக அமைக்கப் பெறுதல் வேண்டும். இன்றைய நிலையில் அடுத்த இருபது ஆண்டுகளில் சாலைப்போக்குவரத்து எந்த அளவில் வளம் பெறும் என்று சொல்ல முடியாது. கடந்த இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன் அமைத்த சாலைகள் இன்று போக்குவரத்துக்கே போதாதனவாக உள்ளதைக் காண்கின்றோம். அப்படியே நகர அமைப்புக்களை அமைக்கும் பெருநகர அமைப்பாளர்களும் இந்த அடிப்படையை மனதில் வைத்தே சாலை அமைத்தல் முதலியன காணல் வேண்டும் தமிழ்நாட்டில் ‘மாநில வீட்டு வசதி போர்டு’ தற்போது தொழிற்படத் தொடங்கியுள்ளது. தமிழ் நாட்டின் நகர்களெங்கும் அது அமைக்கும் திட்டத்திலேயே புதுக் குடியிருப்புக்களும் அவற்றிற்கேற்ற பிற அமைப்புக்களும் உண்டாக்கப் பெறும் என அறிகின்றோம். எனவே நாடு நகர் அமைப்பிலும் அவற்றை இணைக்கும் நெடுஞ்சாலை குறுஞ்சாலைகள் அமைப்பிலும், நல்ல முன்னேற்றம் ! காணமுடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

தொழில் துறைக்கு மற்றொன்று —முக்கியமானது-துறைமுகங்களும், கப்பல் போக்குவரத்தும் ஆங்கிலேயர் விட்டுச் சென்ற பல நல்ல அம்சங்களில் சென்னைத் துறைமுகம் ஒன்றாகும். இந்திய நாட்டுப் பெருந்துறை முகங்கள் மூன்றில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டும் இயற்கையிலே அமைய, இதைப் பெருஞ்செலவு கொண்டு செயற்கைத் துறைமுகமாகச் செய்தார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/172&oldid=1382071" இலிருந்து மீள்விக்கப்பட்டது