பக்கம்:தொழில் வளம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

தொழில் வளம்


றனர். தனியார் துறையிலும் அரசாங்கத் துறையிலும் உந்துவண்டிகள் (Bus) இல்லாத பகுதியில்லை. நெடுந் தொலைவிற்கு விரைவு வண்டிகளும் விடப்பெறுகின் றன. இன்றைய நிலையில் மக்கள் மிக நெடுந் தொலைவு தவிரப் பெரும்பாலும் ரெயிலைவிட உந்துவண்டிகளையே பயன்படுத்துகின்றனர். அப்படியே சாமான்கள் ஏற்றிச் செல்லும் ‘லாரிகளுக்கும்’ தமிழ் நாட்டு அர சாங்கத்தார் அதிகமாகப் ‘பர்மிட்டுகள்’ வழங்குகின்றனர். இன்னும் அதிகமாக வழங்கின் நலம் உண்டாகும். மற்றும் உந்து வண்டிகளைச் செலுத்துவது போன்று அரசாங்கமே முன்வந்து சாமான்களை நெடுந் தொலைவு ஏற்றிச் செல்லும் லாரிகளைச் செலுத்தினால் தொழில் துறையில் உள்ள பல சிக்கல்கள் நீங்கிவிடும் என்பது உறுதி. பத்து அல்லது பதினைந்து டன்கள் சாமான்கள் ஏற்றக் கூடிய பெரு வண்டிகளை (Truck) முக்கியத் தொழில் நகரங்களுக்கு இடையே செலுத்தத் தமிழ் நாட்டு அரசாங்கம் முயலுமானால் நாட்டுத் தொழில் வளம்பெற நல்ல வாய்ப்பு உண்டாகும்.

ஆனால் இந்த வண்டிகள் செல்வதற்குச் சாலைகள் செம்மை வாய்ந்தவைகளாக இருக்க வேண்டும். கிராமச் சாலைகள் இன்னும் நல்ல நிலைக்கு வர நெடுங்காலமாகும் என்பதைப் பின் ‘உழவுத் தொழிலில்’ காண்போம். மற்றச் சாலைகள் அவ்வளவு தாழ்ந்த நிலையில் இல்லை. ஒவ்வொரு திட்டக் காலத்திலும் பல மண் சாலைகள் கற் சாலைகளாகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் சில, முன்னேற்றங்களைச் சாலை அமைப்பில் கண்டிருந்தாலும் அவ்வளர்ச்சி, மக்கள் போக்குவரத்து, தொழில் வளர்ச்சி இவைகளோடு ஒப்பு நோக்கும் போது மிகக் குறைவாகவே உள்ளது. இதனாலேயே பல சாலைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/171&oldid=1382066" இலிருந்து மீள்விக்கப்பட்டது