பக்கம்:தொழில் வளம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளர்ச்சிக்குரிய அடிப்படைகள்

167


பல தேவைகள் தமிழ் நாட்டில் உடனடியாகக் கவனிக்கப் பெறல் வேண்டும்.

போருக்கு முன்னால் இருந்து எடுக்கப் பெற்ற சில இரெயில் பாதைகள் இன்றளவும் திரும்பி அமைக்கப்படவில்லை. இந்திய அரசாங்கக் கணக்கில் ஒவ்வொரு திட்ட காலத்திலும் பல மைல்கள் புதுப்பாதைகள் போடுவதாகக் கணக்குக் காட்டப் பெறினும் தமிழ் நாட்டில் இன்றுவரை யாதொரு புதுப்பாதையும் போடப் பெறவில்லை. மேலே குறித்தபடி இரண்டாம் திட்ட காலத்தில் முடிந்திருக்க வேண்டிய தாம்பரம் விழுப்புரம் மின்சாரப் பாதை இன்னும் பேச்சளவிலேயே உள்ளது. தொழில் வளர வளர அவற்றின் பொருள்களை நெடுந்தொலைவிலிருந்து கொண்டு வரவும் எடுத்துச் செல்லவும் இருப்புப் பாதைகளே பயன்படுகின்றன. அவை வளர்ச்சியடையாத நிலை தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையே யாகும். இத்தேவையைத் தமிழ் நாட்டு அரசாங்கமும் தமிழ் மக்களும் அடிக்கடி வற்புறுத்தி வந்தும் கூட மத்திய அரசாங்கம் ஒன்றும் செய்யாதிருப்பது வருந்தத் தக்கதேயாகும். நெய்வேலி வளர்ந்து வரும் நிலையில் அதை நாட்டொடு இணைக்கும் பல புதிய ரயில் பாதைகள் இட்டாக வேண்டும். சேலம் பெங்களூர், மானாமதுரை விருதுநகர் போன்ற இணைப்பு இருப்புப் பாதைகள் எப்போதோ வந்திருக்க வேண்டியவை. இப்படியே தமிழ் நாட்டில் பல வகையில் முன்னேற்றம் அடைய வேண்டிய இருப்புப் பாதை வளர்ச்சி அடையாத ஒன்றாக அமைந்து கிடக்கின்றது. நல்ல வேளையாக அதை உணர்ந்த தமிழ் நாட்டு அரசாங்கத்தார் சாலைப் போக்குவரத்தை நல்ல முறையில் வளர்த்து வருகின்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/170&oldid=1382065" இலிருந்து மீள்விக்கப்பட்டது