பக்கம்:தொழில் வளம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

தொழில் வளம்


யாகாது. சென்னை போன்ற நகரங்களிலுள்ள பெருந்தொழில்களுக்கெல்லாம் கூடக் கடல் வழியே நிலக்கரியை ஏற்றி வருதல் இனிதாக முடியும். இன்றும் கல்கத்தாவிலிருந்து கப்பல், வழிதான் பெரும் பகுதி நிலக்கரி வருகின்றது. எனவே இதுபற்றித் தமிழ்நாட்டு அரசாங்கம் மத்திய அரசாங்கத்தை வற்புறுத்தி அடுத்த திட்டத்திலாவது இதைச் சேர்க்கவேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இன்னும் அஞ்சல், தந்தி, தொலைபேசி போன்ற பல துறைகளும் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுகின்றன. அவற்றை அரசாங்கம் ஓரளவில் வளர்த்து வருகின்றது என்பது உண்மையே. அவற்றிற்கான பெரும் பொருள்கள் நம் நாட்டிலேயே செய்யத்தக்க வகையில் தொழில் வளம் பெற்றுள்ளதும் பெருமைக்குரியதாகும். மேலே கண்ட பல்வேறு போக்குவரத்துக்குரிய நெறிகளும் அவற்றை ஆக்கும் பல உறுப்புப் பொருள்களும் இன்று இந்தியப் நாட்டிலேயே பெரும்பாலும் செய்யப்பெறுகின்றன. எனினும் இயந்திர அமைப்புக்குரிய பல பொருள்கள் வெளி நாடுகளிலிருந்தே வருகின்றன. தொழில் வளர வளர இந்தக் குறைபாடுகளும் மெல்ல நீங்கிவிடும்.

இவ்வாறு தொழில் வளர அடிப்படைத் தேவைகளான இவைகளெல்லாம் நன்கு அமைந்து நாட்டில் தொழிற் கல்வியும் வளர்ச்சியுறின் தமிழ் நாடு தொழில் வளம் பெற்று எந்நாட்டுக்கும் முன்னாடான நன்னாடாக விளங்கும் என்பது உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/175&oldid=1382224" இலிருந்து மீள்விக்கப்பட்டது