பக்கம்:தொழில் வளம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. உழவுத் தொழில்



'உழவு வேறு; தொழிலுக்கும் அதற்கும் தொடர்பில்லை' எனச் சிலர் எண்ணுகின்றனர். 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' எனப் பாரதியார் பாடிவிட்டார்; எனவே இரண்டும் வேறே எனவாதிப்பர் சிலர். தொழில் பலவகையாகக் கணக்கிடப்பட்டு வளர்ந்து வருகிறதல்லவா! அந்த நிலையில் உழவும் ஒரு தொழிலாகக் கணக்கிடப்பட வேண்டும் - என்பர் சிலர். ஆயினும் எண்ணிப்பார்த்தால் எல்லாத் தொழில்களுக்கு முன்னமே தோன்றியதாய், பல தொழில்கள் தோன்றுவதற்கு ஆதாரமாய் நின்றது இந்த உழவுத் தொழிலேயாகும். அதனாலேயே ஆசிரியர் திருவள்ளுவனார் 'உழவு' என்ற ஓர் அதிகாரத்தை மட்டும் சொல்லி, அதன் வழியே எல்லா உலகத்தொழில்களும் அமைகின்றன என்பதைக் குறிப்பாகக் காட்டி, மற்றவை பற்றி ஒன்றும் கூறாதுவிட்டார். உழவு தலையாய சிறந்த தொழில் என்பது உறுதி.

தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டில் உழவு சிறந்து போற்றப்படுகின்றது; போற்றப்பட வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/176&oldid=1382060" இலிருந்து மீள்விக்கப்பட்டது