பக்கம்:தொழில் வளம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவுத் தொழில்

175


கொடுத்த சிறப்பை, வேளாண்குடியில் அரசர்கள் பெண் கொண்டமையினாலும், வேளாளர்களே அரசர்களுக்கு முடிபுனைய உரிமை பெற்றவர்களாகச் சிறந்தமையாலும் நன்கு உணரலாம். அமைச்சர்களோ அன்றிச் சேனைத் தலைவர்களோ பிற அலுவலர்களோ அந்த உரிமையைப் பெற்றதாக எங்கும் பழங்கால வரலாற்றிலும் காணமுடியாது. இத்தமிழ் நாட்டுச் சிறந்த வழக்கத்தினையே வடநாட்டு வரலாற்றைப் பாடவந்த கம்பர் தனது இராமாயணத்தில்,

‘வெண்ணையூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி

வசிட்டனே புனைந்தான் மெளலி’

எனப் பாராட்டுகின்றார். தமிழ்காட்டில் உள்ள ஒரு சார் வேளாளருக்குக் ‘கொண்டைகட்டி வேளாளர்’ என்ற பெயர் உண்டு. அவர்கள் அரசர்களுக்குக் கொண்டை கட்டி முடி புனைவித்ததாலேயே அப்பெயர் பெற்றதாகக் கூறிக்கொள்வர். எனவே தமிழ்நாட்டு வரலாற்றில் என்றும் உழவுத் தொழிலும் அதைச் செய்த வேளாளர் மரபும் சிறந்து போற்றப்பட்டன எனக் காண்கிறோம்.

கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த சோழன் கரிகாற் பெருவளத்தான் போன்ற பெருமன்னரும் இடைக் காலத்தில் வாழ்ந்த இராசராசனும் அவன் பரம்பரையினரும் காஞ்சியில் ஆண்ட பல்லவரும் உழவுத் தொழிலைக் கண்ணெனப் போற்றி வாழ்ந்தனர். இன்றைக்குச் சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவர் அமைத்த ‘திரையனேரி’ ‘பல்லவனேரி’ போன்ற பேரேரிகள் மருஉப் பெயர்களுடன் இன்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/178&oldid=1382121" இலிருந்து மீள்விக்கப்பட்டது