பக்கம்:தொழில் வளம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவுத் தொழில்

179


மும் தன் தேவைக்கு ஏற்ற தன்னிறைவு உள்ளதாக அமைந்த அடிப்படை – சிறந்த ஒன்றல்லவா? இதையே தான் நாட்டின் மேல்வைத்து ஒவ்வொரு நாடும் தன்னிறைவுடையதாய் எப்பொருளுக்கும் பிற நாட்டார் கையை எதிர் நோக்காததாக இருக்க வேண்டுமெனவும் அவ்வாறு இருப்பதே நாடு என்னும் பெயருக்குத் தகுதி வாய்ந்ததெனவும் வள்ளுவர் விளக்குவர்.

“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந் தரும் நாடு”

என்பது அவர் வாக்கு. இந்த நிலையில் இன்று உலகில் எந்த நாடும் இல்லை என்றாலும் பல நாடுகள் பல வகைகளில் தன்னிறைவு கொண்டுள்ளதைக்காண் கின்றாேம். பரந்த பாரதநாடும் அதன் அங்கநாடாக உள்ள தமிழ் நாடும் அந்த அளவில் பிறர் கையை நோக்காத பேராண்மைத்திறம் வாய்ந்தனவாக விளங்க வழித்துறை ஆய்ந்து வளர்க்க வேண்டுமென்பதே என் ஆசை. எண்ணற்ற வழித்துறைகளை நாம் எடுத்துக்காட்டலாம்; ஆயினும் அத்துறையில் வல்ல பல அறிஞர்கள்நாட்டில் செயலாற்றும்போது நான் அதில் தலையிடல் பொருந்துமா என்ற உணர்வால் அமைகின்றேன். எனினும் ஒன்றுமட்டும் உறுதி. நாட்டில் உள்ள கிராமங்கள் அத்தனையும் தன்னிறைவு உள்ளனவாகி தத்தமது தொழிலாகிய உழவினைப் பெருக்கி ‘நாடெங்கும் வாழக் கேடொன்றுமில்லை’ என்ற அடிப்படையின் பண்பட்ட நெறியில் கிராம மக்கள் வாழ்கின்ற வகையில்-வளருமானால் நாடு முழுதும் விரைவில் முன்னேறி வளம் பெற்றுச் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

உழவுத்தொழில் வளர்வதற்குச் செய்ய வேண்டிய ஆக்கப்பணிகள் பல. அவற்றுள் சிலவற்றை இந்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/182&oldid=1400226" இலிருந்து மீள்விக்கப்பட்டது