பக்கம்:தொழில் வளம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

தொழில் வளம்


அரசாங்கமும் தமிழ் நாட்டு அரசாங்கமும், ஓரளவு செய்து வருகின்றார்கள். அவற்றை ஓரளவு கண்டு மேலே செல்லலாம். கீழிருந்து மேலே சென்றால்தான் திட்டங்கள் சிறக்கும் எனக் கண்டோம். எனவே கிராமங்களை எடுத்துக் கொள்ளுமுன் ஒவ்வொரு வீடும் திட்டமாக அமையத் தக்க முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இம்முயற்சி அரசாங்கத்தால் மட்டுமோ அன்றித் தனி மனிதனால் மட்டுமோ இயல்வதன்று. நாட்டில் உள்ள எல்லா மக்களும் – கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் – இத்துறையில் பங்கு கொண்டு உழைத்தால்தான் பலன் காணமுடியும். எனவே நாட்டில் உள்ளார் அனைவரும் ‘பசியும் பிணியும் பகையும் நீங்கி’ வாழ வேண்டிய வகையில் எல்லாரும் ‘எல்லாச் செல்வமும் பெற’ வேண்டிய வகையில் திட்டங்கள் அமையவேண்டும். ‘வீடு திருந்தினால் நாடு திருந்தும்’ என்பது பழமொழி. எனவே ஊர்தொறும் உள்ள வீடுகள் திருந்த வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் திட்டம் வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வாழ்கின்ற மக்களின் எண்ணிக்கை – அவர்தம் உறவுமுறை – அவர்தம் வாழ்க்கை வகை – அவர்தம் தொழில்நிலை – அவர்தம் பொருளாதாரம் முதலியவை பற்றிய அடிப்படைத் திட்டமே முதலில் தீட்டப்பட வேண்டியுள்ளது. எவ்வளவுதான் முயன்று சமதர்மச் சமுதாயத்துக்கு அரசாங்கம் வழிகோலினாலும் எல்லா ஏற்றத் தாழ்வுகளும் இன்னும் வளர்ந்து கொண்டேதான் போகின்றன. இந்த ஏற்றத்தாழ்வுகள் நாட்டிலிருந்து – சிறப்பாக உழவுத் தொழிலில் இருந்து – நீங்க வேண்டும். எல்லாத் தொழில்களும் நடைபெறுவன போன்றே உழவுத் தொழிலும் மக்கள் கூட்டு முயற்சியிலேயே நடைபெற வேண்டும். விதை தெளிப்பது தொடங்கி,சந்தையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/183&oldid=1400311" இலிருந்து மீள்விக்கப்பட்டது