பக்கம்:தொழில் வளம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவுத் தொழில்

181


பெற்ற பொருளை விற்கும் வரையில் தனக்கு உதவுபவரைக் கணக்கிட்டு விவசாயி எண்ணினால் நிச்சயம் மலைத்து விடுவான். அதுமட்டுமின்றி ஊரின் பொது விவசாயத்துக்கே பலர் துணை தேவை. இந்த அடிப்படையை மறந்த காரணத்தாலேயே நாட்டில் பயிரிட்த்தக்க நிலங்களிலேயே மூன்றில் ஒரு பங்கு தரிசாகக் கிடக்கின்றது எனக் கணக்கெடுத்துக் காண்கின்றாேம். இந்த நிலைமாற வேண்டும்.

உழவுத்தொழிலை வளர்க்க இன்று நாட்டில் எத்தனையோ திட்டங்கள் உள்ளன. ஒரு சில காண்போம். உழவுத் தொழிலுக்கு முக்கியமானது நீர்ப்பாசனம். இத் துறையில் தமிழ் நாட்டு அரசாங்கம் நல்ல கருத்திருத்தி வருகின்றது. உழவுத்தொழில் வளரவேண்டுமானால் உழவர்களுக்கு முதலில் நல்ல கால்நடைகள் தேவை. பெரு இயந்திரங்களைக் கொண்டு பயிர்த் தொழில் நடத்தும் அளவுக்கு இன்னும் நாடு முன்னேறவில்லை. மக்களுள் ஒவ்வொருவரும் தத்தமக்குரிய சிறு சிறு நிலங்களை விட்டுவிட விரும்பாதவர்களே உள்ளனர். எனவே சிறிதளவே நிலமுள்ளவர்களே நாட்டில் பெரும்பான்மையராக உள்ளனர். எனவே அவர்களுக்கு மாடுகளைத் தவிர வேறு துணையில்லை. பழங்காலத்திலும் நாட்டில் ‘மாடே’ செல்வமாக இருந்தது. திருவள்ளுவர் செல்வம் என்ற பொருளில் ‘மாடு’ என்ற சொல்லையே வழங்கியுள்ளார்.

கோடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை

என்பது குறள். எனவே பயிர்த்தொழில் சிறக்க வேண்டுமானால் தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டில் முதலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/184&oldid=1400312" இலிருந்து மீள்விக்கப்பட்டது