பக்கம்:தொழில் வளம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

தொழில்ர்வளம்



வசதியே காரணம் எனக் காட்டுவர். எப்படியாயினும் கை வருந்தி உழைக்கும் தமிழர்கள் கலம் கொடுக்கும் பூமியைப் பிசைந்து பாடுபட்டு இருகலம் விளையச் செய் கின்றனர் என்பது உண்மை.

நீர்ப்பாசனம், நன்றாகக் கவனிக்கப் பெறுதல் வேண்டும்.

'ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு'

என்று திருவள்ளுவர் உழவுத் தொழிலுக்கு ஏரும் எருவிடுதலும் நீர்ப்பாய்ச்சுதலும் பூச்சி முதலியவற்றாலும் விலங்கு முதலியவற்றாலும் சேதம் உண்டாகாமல் காப்பாற்றுதலும் மிகவும் இன்றியமையாது வேண்டப்படுவன என்பதை ஒரே குறளில் விளக்கி விட்டார். எனவே ஏருக்கும் எருவுக்கும் பயன்படும் கால் நடைகளைக் கவனிப்பதுடன் நீர்ப்பாசனத்தை நன்கு கவனித்தல் வேண்டும். தமிழ் நாட்டு விளைநிலங்களுள் 38% நீர்ப்பாசன வசதி பெற்றுள்ளன என்று சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த கணக்குக் காட்டுகின்றது. தற் போது சற்று அதிகமாக இருக்கலாம். தமிழ் நாட்டுப் பேராறுகளிலிருந்தெல்லாம் தண்ணீரை வீணாக்காமல் அணைகள், கட்டி, நாட்டின் பழம்பண்பாடுக்கு ஏற்ப 'குளந்தொட்டு வளம் பெருக்கி' வருகின்றார்கள். வடக்கே ஆரணியாறு மண்அணை தொடங்கி குமரி நாட்டுச் சிறு அணை வரையில் எண்ணற்ற அணைகள் நாட்டு வளத்தை வளர்க்கின்றன. மேட்டூர், குந்தா, பாப்நாசம், தேக்கடி போன்ற பேரணைகள் பாசனவசதியோடு மின்சார வசதிக்கும், வாய்ப்பளிக்கின்றன. (இவை பற்றி விரிவாகப் பின் காணலாம்). இந்த மின்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/187&oldid=1382189" இலிருந்து மீள்விக்கப்பட்டது