பக்கம்:தொழில் வளம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவுத் தொழில்

183


அரசாங்கம் சென்ற பத்து ஆண்டுகளில் கால்நடை வளத்தைப் பெருக்கியுள்ளதாகக் கணக்குள்ளது. கால் நடை அடிப்படைக் கிராமங்கள் 234 உள்ளன வென்றும் 39 செயற்கைக் கருத்தரிப்பு நிலையங்கள் உள்ளனவென்றும் அறிகிறோம். இவற்றைத் தவிர கால் நடைகளின் வழி மக்கள் உணவுக்கு இன்றியமையாததான பால் உற்பத்தியைப் பெருக்கும் வழிகளும் ஆராயப் பெறுகின்றன. பம்பாய் நகருக்கு உள்ளது போன்ற பெரிய பால்பண்ணை நிலையம் சென்னை நகருக்கு இல்லையென்றாலும் அந்த அடிப்படையில் அரசாங்கம் மாதவரத்தில் சிறுக அமைத்து வளர்த்து வருவது போற்றற்குரியதாகும். இன்னும் சிறு நகரங்களிலும் பேரூர்களிலும் கூட்டுறவு வகையில் பால் பண்ணை அமைத்துப் பால் வளத்தைப் பெருக்குகிறார்கள் எனினும் இத்துறைகள் இன்னும் செழிக்க வழியுண்டு. வள்ளுவர் சொன்னபடி அவற்றை உண்மைச் செல்வமாக மதித்து வளர்த்தால் உழவும் கிராமமும் மட்டுமல்லாது நாடே நலம்பெற்றோங்கும் என்பது உறுதி.

தமிழ நாட்டிலேயே நல்ல வகையில் உழவு நடைபெறுகின்றது எனப் புள்ளிக் கணக்குகள் காட்டுகின்றன. தமிழ் நாட்டுச் செல்வ வளத்தில் பெரும்பகுதி பயிர்த் தொழில், மூலமே வருகின்றதெனக் கணக்கிட்டுள்ளனர். ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் ஏக்கரில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள விளை பொருள்கள் உண்டாகின்றன எனக் கணக்கிட்டுள்ளனர். பரந்த பாரதம் ஏக்ராவுக்கு ரூ. 152 பெறுமான பொருளை உற்பத்தி செய்ய; தமிழ் நாடோ ,ரூ182 பெறுமான பொருளை உற்பத்தி செய்கின்றதெனக் கணக்கிட்டுள்ளனர். இதற்கு நாட்டில் அமைந்துள்ள சிறந்த நீர்ப்பாசன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/186&oldid=1382317" இலிருந்து மீள்விக்கப்பட்டது