பக்கம்:தொழில் வளம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

தொழில் வளம்



ஆணைவழி ஆக்கத்துக்கு வழிகோலல் வேண்டும். அன்றேல் உழவுத்தொழில் பாதிப்பது மட்டுமன்றி சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வாழும் இலட்சக் கணக்கான மக்கள் குடிநீரும் இன்றி வாடுவர். இப்பெரு நகர்களில் நீர் தரமறுக்கும் அண்டைநாட்டு நம் சகோதரர்களும் எண்ணற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.

சிறு நீர்ப்பாசனங்களைப் பற்றியும் காணல் வேண்டும். நம் நாட்டில் சுமார் 27,000 ஏரி குளங்கள் உள்ளன. இவற்றைச் சீர்செய்ய சென்ற இரண்டு திட்ட காலங்களிலும் சுமார் எட்டு கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்திலும் அதே தொகை ஒதுக்கப் பட்டுள்ளது. அண்மையில் புது ஏற்பாடு ஒன்று நடைபெறுவதாக அறிகிறோம்-200ஏக்கருக்குக் குறைவாகப் பாயும் ஏரிகளைப் புதிதாக அமைக்கப்பட்ட பஞ்சாயத்து ஒன்றிப்பு (union) களிடம் ஒப்படைக்கும் திட்டம் போலும். அவை இச்சிறு ஏரிகளின் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செயலாற்றலாம் என எதிர்பார்க்கலாம். ஆழமற்ற சில ஏரிகளை ஆழமாக்குவதற்கும் வருத்துக் கால்வாய்களை அகலமாக்கியும் ஆழமாக்கியும் வருத்தைப் பெருக்குவதற்கும் பல திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தால் இரண்டாவது ஐந்தாண்டில் சுமார் முப்பத்தாறு லட்ச ரூபாய் செல்வில் 47 ஏரிகள் ஆழமாக்கப் பட்டனவாம். மூன்றாவது காலத்திற்கு எண்பது லட்சம் ஒதுக்கப் பட்டுள்ளது போலும்.

கிணற்றுப் பாசனமும் ஓரளவு வளர்ச்சி பெற்றுள்ளது. சிறு குழாய்க் கிணறுகளும், சில விடங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/189&oldid=1382197" இலிருந்து மீள்விக்கப்பட்டது