பக்கம்:தொழில் வளம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவுத் தொழில்

187



தொழில்படுகின்றன. வடி குழாய்க் கிணறுகளும் அரசாங்கம் அமைத்துள்ளது. இதுவரை ஐயாயிரம் வடிகுழாய்க் கிணறுகள் அமைக்கப் பட்டுள்ளதென அறிகிறோம். இவ்வாறு பல்வேறு வகையில் பாசன வசதிகள் செய்த போதிலும் நாம் மேலே கண்டபடி விளையும் நிலங்களில் மூன்றி லொரு பகுதிக்கே இப்பாசன வசதிகள் கிடைத்துள்ளன. அரசாங்கம் இன்னும் முயன்றால் விளையுள் பெருகும் என்பது உறுதி.

பாசனத்தைப் பற்றிக் கூறும்போது உழவுத் தொழிலும் பிற பெருந் தொழில்களும் மின்சார வளர்ச்சியும் எப்படி இணைந்துள்ளன என நினைக்க வேண்டியுள்ளது. கிணற்றுப் பாசனங்களுக்குப் பயன் படும் இறவை இயந்திரங்களும் அவற்றிற்குத் துணையாகிய மின் இயங்கிகளும் (Electric Motors) செய்யப்படும் தொழிற்சாலைகள் நம் கண்முன் நடமாடுகின்றன அல்லவா! கோவையில் எத்தனைத் தொழிற்சாலைகள் இறவை இயந்திரங்களைச் செய்து முன்னேறி உள்ளன. மின்சார இயங்கியைச் செய்யும் பி. எஸ். ஜி. போன்ற தொழிற்சாலைகள் சில, உள்ளன. இவை யெல்லாம் உருக்குத் தொழிலுக்கும் பயிர்த்தொழிலுக்கும் உள்ள உறவை வளர்ப்பது தானே.

அப்படியே நாடெங்கும் பரவிவரும் மின்சார் வளர்ச்சியும் அதன் துணையாக வளரும் பல தொழில்களும் உழவுக்கு உதவுகின்றன அன்றோ! இப்படியே இன்னும் உழவுக்கு வேண்டிய பல பொருள்களைச் செய்யும் தொழிற்சாலைகளும் உள்ளனவே. எனவே தமிழ் நாட்டில் உழவுத் தொழிலால் வளரும் தொழிற் சாலைகள் பல என்பதை நாம் இங்கு உணர்ந்து நோக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/190&oldid=1382211" இலிருந்து மீள்விக்கப்பட்டது