பக்கம்:தொழில் வளம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

தொழில் வளம்


 பாசனத்துக்கு அடுத்த படியாக உழவுத்தொழில் பெற வேண்டியது நல்ல எருவாகும். இயற்கை உரமாகிய சாணம் பாழ் படுத்தப்படுவதை முன்னமே கண்டோம். நம் நாடு காட்டுவளம் குறைந்த நாடானமையால் பசுந்தழை உரமும் அதிகமாகப் பெறமுடிவதில்லை. பசுந்தாள் உரம் பயிரிடுகின்ற முயற்சி பல ஆண்டுகளாக இருப்பினும் அம்முயற்சி நன்கு வெற்றி பெற வில்லை எனவே தோன்றுகிறது. ஓர் ஆண்டில் இத்தழை வித்துக்கள் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு 1500 டன் வழங்கப் பட்டுள்ளது. மூன்றாவது திட்ட காலத்துக்குள் எல்லா நிலங்களுக்கும் பசுந்தழை உரம் தரமுடியும் என முயலலாம். எனினும் மக்கள் அறிந்தோ அறியாமலோ அன்றி முடியாத பல காரணங்களாலோ பசுந்தழை உரத்தில் அதிகம் கருத்திருத்த வில்லை.

செயற்கை உரத்தின் தேவை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகின்றது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழ் நாட்டில் 48,000 டன் அமோனியம் சல்பேட் வழங்கப் பெற்றதாம். 60-61ல் ஒன்றேகால் லட்சம் டன்னுக்கு மேல் வழங்கப் பெற்றிருக்கலாம். அப்படியே சூப்பர் பாஸ்பேட் அறுபதாயிரம் டன்னுக்கு மேலாக வழங்கப் பெறுகின்றது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்துக்குள் இரண்டும் சுமார் ஏழு லட்சம் டன் பயன்படுத்தப் பெறும் போலும். எனினும். இன்றுள்ள பயிரிடும், ஏக்கர் கணக்கில் ஆறு லட்சம் டன் அமோனியம் சல்பேட்டும் மூன்று லட்சம் டன் சூப்பர் பாஸ்பேட்டும் தேவையாகும். இன்னும் உழவு வளர்ச்சி அடைய அடைய 1971ல் 7 1/2 லட்சம் டன் சல்பேட்டும் 3 2/4 லட்சம் டன் பாஸ்பேட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/191&oldid=1382217" இலிருந்து மீள்விக்கப்பட்டது