பக்கம்:தொழில் வளம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவுத் தொழில்

195


எல்லாவகைப் பயிர்களையும் பயிரிட முடியாது என்பது உண்மைதான். எனினும் இயன்ற வகையில் முயன்றால் நல்ல பயன் கிடைக்கும் என்பது உறுதி. இதனால் நெல் பயிரே நாட்டில் இல்லாது உணவு முட்டுப் பாட்டை உண்டாக்க வேண்டுமென்பது எனது நோக்கமன்று ; இயன்றவரை வருவாய் தரும் பயிர்களை உண்டாக்கினால் உழவர் தரம் உயரும் என்பதே நோக்கமாகும். அதற்கேற்றபடி நம்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு சர்க்கரை ஆலைத் தொழில் வளம் பெற்று வரும் வகையில் அரசாங்கத்தார் ஆவன செய்துள்ளனர். தமிழ்நாட்டுப் பக்கநாடுகளில் உயர்ந்த விலையுள்ள பொருள்களை விளைவித்துப் பொருள் வளத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் வளர்த்துக் கொள்வதைக் காணும் நாமும் அத்துறையில் முன்னேற்றம் காண வேண்டுவது அவசியமாகும்.

இதுவரை கண்டவை அனைத்தும் உழவுத் தொழிலுக்கு நேரடியாகச் செய்யவேண்டிய ஆக்க வேலைகளாகும். இனி இத்தொழிலில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் இத்தொழிலுடன் இணைந்த வேறு பிறவற்றை மேற்கொள்வது பற்றியும் இவர்தம் விளைபொருள்களுக்குத் தக்க சந்தைகள் அமைப்பது பற்றியும் வேறு பிறவற்றைப் பற்றியும் கண்டு அமைவோம். கிராமங்களில் உள்ள மக்களுக்குப் பயிர்த்தொழிலில் நிறைய ஓய்வுவேளைகள் உண்டு. மற்றும் வயலில் நேரடியாக வேலை செய்யும் சில குடும்பங்களைக் தவிர்த்து, கிராமங்களில் பல பெண்கள் வேலையற்றே வீண்நேரம் போக்கிக்கொண்டிருப்பர். மக்கள் வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் வளரும் சமூகத்துக்கு (நஷ்டமே) இழப்பே என்று உணரவேண்டும். உணர்ந்து உழவுப் பணியில் ஓய்வு பெறுபவரும் மற்ற-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/198&oldid=1382239" இலிருந்து மீள்விக்கப்பட்டது