பக்கம்:தொழில் வளம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

196

தொழில் வளம்



தொழில் பெருக வேண்டும். மற்றும் நம் நாட்டில் புதுப்புது பாசன வசதிகள் உண்டாகின்றன. அவற்றின் ஆக்கச் செலவுகளோ பெருகிக்கொண்டே போகின்றன. எனவே அவற்றின் வழி நீர்ப்பாசனம் பெறும் நிலங்கள் கட்டாயமாக அதிக நீர்வரி தர வேண்டியதாயிருக்கும். நாட்டின் பல திட்டங்களை நிறைவேற்றப் பொதுவான நிலவரியும் அதிகமாகலாம். எனவே அவற்றைச் சரிசெய்யத் தக்கவகையில் பயன் தரும் பயிர்களைப் பயிரிடல் அவசியமாகும். மற்றும் பயிரிடு முறைகள் பலவகையில் மாறுகின்றன. நம் நாட்டில் நாம் மேலே கண்டபடி மாற்றத்துக்கு மக்கள் மனவிருப்பம் இல்லாதிருந்தபோதிலும் எப்படியோ அவர்கள் அறிந்தோ அறியாமலோ சிலமாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றின் வழி முயன்றால் நல்ல பயனைக் காணக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு பயிரிடுவோமாயின் சிறந்த பயன்கள் உண்டாகும். நவதானியத்துக்கும் நெல்லுக்கும் வேறுபாடு உண்டு. ஒரு ஏக்கரில் கீழ்க்கண்ட படி பயிரிடும் பயிருக்கு ஏற்ப வருவாய் மிகும் என உணரவேண்டும்.

நவதானியம் (ஒரு ஏக்கருக்கு) 100 ரூபாய் எண்ணெய் வித்துக்கள் (ஒரு ஏக்கருக்கு) 165 ரூபாய் நெல் (ஒரு ஏக்கருக்கு) 226 ரூபாய் உருளை அல்லது வெங்காயம் (ஒரு ஏக்கருக்கு) 670-680 ரூபாய் கரும்பு (ஒரு ஏக்கருக்கு) 1100 ரூபாய்

இந்த அளவில் பயிர்ப் பொருள்கள் பயனளிப்பதறிந்தும் அவற்றை அறிந்து தொழில்படுத்தாதிருப்பது வருந்தத்தக்கதன்றாே! ஒருசில இடங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/197&oldid=1400315" இலிருந்து மீள்விக்கப்பட்டது