பக்கம்:தொழில் வளம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவுத் தொழில்

193



நன்செய் விளையுளைவிடப் புன்செய் விளையுள் அதிக வருவாய் தருவதைக் காண்கிறோம். இவை அனைத்தும் உழவு இன்று சரியாகப் போற்றப்படாத காரணத்தாலே நடைபெறுகின்றன. தமிழ்ச் சமுதாயமும் தமிழ்நாட்டு அரசாங்கமும் ஒன்றிக் கருத்திருத்தி 'சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம்' என்ற வள்ளுவர் குறளை உணர்ந்து அவ்வழவை வளர்க்க முயலவேண்டும்.

இனி இவ்வுழவின் மற்றொரு பகுதியைக் காணலாம். நம் நாட்டில் பெரும்பாலும் நன்செய் நிலத்தில், நெல் பயிரிடுவதைத்தான் காண்கின்றோம். சிலவிடங்களில் எண்ணெய் வித்துக்களும் சிலவிடங்களில் கரும்பு, புகையிலை போன்றனவும் பயிராகின்றன. மலைப்பகுதிகளில் காப்பி, தேயிலை முதலியன பயிராகின்றன. வாழையும், தென்னையும் தமிழ்நாட்டு எல்லா மாவட்டங்களிலும் உள்ளன. கேழ்வரகு, கம்பு போன்ற நவதானியங்களும் சிலவிடங்களில் பயிராகின்றன. தோட்டப் பயிர்களாகிய காய்கறி வகைகள் எல்லா இடங்களிலும் பயிராகின்றன. சிலவிடங்களில் பாக்கு, பருத்தி முதலியவையும் மலர்வகைகளும், பழவகைகளும் பயிரிடப் பெறுகின்றன. எனினும் இத்தகைய பயிர்களை உண்டாக்கிப் பயன் காணுவோர் மாற்றுப் பயிர் செய்யப் பெரும்பாலும் விரும்புவதில்லை. ஒவ்வொரு பகுதியிலும் அவ்வந் நிலத்தின் தரத்துக்கும் வளத்துக்கும் ஏற்ற பயிர்களைப் பயிரிடின் நல்லபயன் காணலாம். சிலவிடங்களில் உள்ள மக்கள் தங்கள் முன்னோர் பயிரிட்ட அதே வகையான பயிர்களையே பயிரிடுவாரேயன்றி வேறு பயன் தரும் பயிர்களைப் பயிரிடமாட்டார்கள். இந்த மனநிலை மாறவேண்டும். நிலத்துக்குத் தக்க வளமும் பொருளும் தரக்கூடிய வகையில் பயிர்த்

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/196&oldid=1382241" இலிருந்து மீள்விக்கப்பட்டது