பக்கம்:தொழில் வளம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

தொழில் வளம்


பட்டிருக்கலாம். கூடுமானவரை அம்மாறுபாடுகளையும் பிறவேறுபாடுகளையும் கருதி இவற்றைச் செயல்படுத்த விரும்புபவர்கள் சிறந்த வழியை மேற்கொள்ள வேண்டும்.

மற்றும் மண்வளப் பாதுகாப்பும் உழவின் ஒரு முக்கிய தேவையாகும். நம் நாட்டில் 1952-ல் நீலகிரியல் இத்துறையில் அரசாங்கம் தொழிற்படத் தொடங்கிற்று. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் 17,000 ஏக்கர் அதன் எல்லைக்குட்பட்டுப் பாதுகாப்பு செய்யப் பெற்று, இரண்டாவதில் 87 லட்ச ரூபாயில் 133,900 ஏக்கர்கள் பண்படுத்தப்பட்டன. மூன்றாவது திட்டத்தில் 21 கோடி அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அத்துறையில் கருத்திருத்திச் செயல்படின் நாட்டின் உழவு இன்னும் நனி சிறக்கும் என்பது உறுதி இந்த அடிப்படையில் பல மாவட்டங்களில் உண்டாகும் கரை அரித்துக்கொண்டு போதல், வெள்ளத்தால் மண் சேர்தல் முதலிய கொடுமைகளையும் நீக்க முயல வேண்டும்.

நாட்டில் நன்செய், புன்செய் என இருவகை நிலங்கள் உள்ளன. வளமும் பாசன வசதியும் பெற்றவை முன்னவை. வான் நோக்கி வளமற்று நிற்பன புன் செய். முன்னதிலும் பின்னதே நாட்டில் அதிகமாக உள்ளது. நாம் மேலே காட்டிய சிலகாரணங்கள் அந்த நிலங்களிலும் பல பாகங்கள் பயிரிட முடியாத நிலையில் உள்ளன. மக்கள் முயன்றாலும் வெற்றியடையாத நிலையில் சில பகுதிகளும், அளவின் குறைவாலும் மாறுபாடுகளாலும், பிற சூழல்களாலும் விளையாத நிலையில் சில பகுதிகளும் உள்ளன. சிலவிடங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/195&oldid=1382235" இலிருந்து மீள்விக்கப்பட்டது