பக்கம்:தொழில் வளம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவுத் தொழில்

191


பெரும் அளவு நிலம் வைத்திருப்பது தவறு என்ற அடிப்படையில், தமிழ்நாட்டு அரசாங்கம் சட்டமே கொண்டுவந்து, முப்பது ஏக்கர் என்ற மேல் வரம்பை வகுத்துள்ளது. எனினும் அதைச் சட்டமாக்கக் காலம் தாழ்ந்த காரணத்தால் அதனால் உண்டாக வேண்டிய முழுப் பயனும் நாட்டுக்கு உண்டாகாமல் போயிற்று என்பது தெளிவு. அப்படியே ஜமீன்தார் போன்ற இடைநிலத் தரகர்களையும் அரசாங்கம் ஒழித்தது போற்றற்குரியது. அப்படியே கீழ்வரம்பும் வகுத்தாலன்றி நாட்டில் உழவு சிறக்க வழியில்லை. பல கிராமங்களுக்கு நேராகச் சென்று பார்த்தால் இவ்வுண்மை புலனாகும். ஒரு தனிமனிதன் பயிரிடக்கூடிய அளவுக்கு உரிய நிலம் ஒருவனுக்கு ஒரே இடத்தில் இருந்தால் அவன் அதைப் போற்றிப் பாதுகாப்பான். அந்த அளவு மூன்று அல்லது ஐந்து ஏக்கராக அமையட்டும். பல கிராமங்களில், 10 செண்டு, 5செண்டு, நிலங்களை மேலும் பாகப்பிரிவினை செய்து கொண்டு ஒரு ஏக்கரில் பத்துப் பதினைந்து உரிமையாளர் இருந்து கொண்டு ஒரு வருடன் ஒருவர் ஒத்துழைக்காமல் பல ஏக்கர் நிலங்களைத் தரிசாக விட்டிருப்பதைக் காணலாம். அவற்றை யெல்லாம் ஒன்றாக்கி ஒருவரிடம் ஒப்படைத்தால் நன்கு பயிரிட முடியும். தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் உந்துவண்டி (Bus) செலுத்துவோருக்குக் குறைந்தது இத்தனை வண்டிகள் இருக்க வேண்டுமெனச் சட் டம் செய்யவில்லையா! அப்படியே இதையும் செய்யலாம். இதனால், ஏழைகளுக்குத் தொல்லை இராது. பலவிடங்களில் சிறு சிறு துண்டு நிலங்களாக வைத்திருப்பவர்கள் தத்தமக்கு உரிய ஒருசில ஏக்கர் நிலத்தை ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு, முயன்று பயிர் செய்யலாம். நிலத்தின் தரம் இடத்துக்கு இடம் மாறு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/194&oldid=1382231" இலிருந்து மீள்விக்கப்பட்டது