பக்கம்:தொழில் வளம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

தொழில் வளம்



மேற்பார்வையினாலேயே உண்டாக்கித்தரக் கடமைப்பட்டுள்ளார்கள். ஆம், அந்த முறையில் தற்போது உழவர்களுக்குப் பல்வேறு விதைகள் பகிர்ந்தளிக்கப் பெறுகின்றன. தற்போது நல்ல விதைக்காக 136 அரசாங்கப் பண்ணைகள் உள்ளன வென்றும் தேவை 210 என்றும் கணக்கிட்டுள்ளனர். மற்றும் இந்த விதைகளை அரசாங்கத்தார் உழவருக்குக் குறைந்த விலைக்கும் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர் போலும். மற்றும் இந்த விதைகளை நல்ல முறையில் தயார் செய்பவர்களுக்கும் மானியம் அளிக்கின்றனர். இத்தகைய : முயற்சிகளின் பயனாக நாட்டில் உழவுத் தொழில் நன்கு வளர்ந்துள்ளது எனக் கணக்கிட்டுள்ளனர். 1959-60ல் ஏக்கர் ஒன்றுக்குச் சராசரி 1,332 ராத்தல் அரிசி விளைந்துள்ளதென்றும் 1965-66ல் அது 1,890 ராத்தலாகப் பெருக வேண்டுமென்றும் அரசாங்கத்தார் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றனர். அப்படியே புன்செய்த் தானியங்களை ஏக்கருக்கு 712 ராத்தலுக்கு உயர்த்த முயல்கின்றனர்.

மண்வளப் பாதுகாப்பே உழவுக்கு அடிப்படை. நிலத்தைப் பண்படுத்தும் முறையிலும் சில(Consolidation of holding)மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளன. இன்று நாட்டில் கூட்டுறவு முறையில் பயிர்த்தொழில் நடைபெற வேண்டுயென்ற திட்டத்தை அரசாங்கத்தாரே முன்னின்று செயலாற்றத் தொடங்கியுள்ளனரென்று அறிகிறோம். சிலர் அதைக் கடுமையாக எதிர்ப்பதையும் காண்கின்றோம். என்றாலும் இக் கூட்டுறவுத் துறைவழி அமையும் உழவுத் தொழில் வெற்றி அடையுமா என்ற கேள்விக்கு எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்ற அளவில் நாம் அமையலாம். நில உடைமையற்றியும் பல சட்டங்கள் வந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/193&oldid=1382232" இலிருந்து மீள்விக்கப்பட்டது