பக்கம்:தொழில் வளம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவுத் தொழில்

197


களில் - ஊர்களில் - அருகி வருவதைக் காண்கிறோம். பணத்தைக் குறிக்கோளாகக் கொண்டு பல பெரு மரங்களெல்லாம் வெட்டப்பட்டுச் சோலைகளெல்லாம் அழிக்கப்படுவதைக் காண்கிறோம். ஆனால் அதற்குப் பதிலாக வேறு மரங்களை வைத்து வளர்ப்பவர், மிகச் சிலரே. அரசாங்கம் பல ஆண்டுகளாக ‘வன மகோற்சவம்’ என்னும் செடி நடு விழா நடத்தியும் நாட்டில் நட்ட மரங்கள் தழைப்பது, அருமையாக உள்ளது. அரசாங்கக் கணக்கே அதை நன்கு காட்டும். இதற்குக் காரணம் எதுவாயினும் ஆகுக. கிராம மக்கள், சிறப்பாகப் பயிர்த்தொழில் செய்து வாழும் மக்கள், தங்கள் ஊர்களைச் சோலை சூழ்ந்த ஊர்களாக்க வேண்டும். அதனால் அவர்கள் எண்ணற்ற பயன்கள் பெறுவார்கள் ; முன்னாளில் பெற்றார்கள், நாம் மேலே கண்ட சாணம் எரிபொருளாக்கத் தேவை இருக்காது. அவரவர் தோட்டங்களில் விழும் சுள்ளிகளும் பிறவும் எரிக்கப் பயன்படுத்தப்படின் சாணம் நல்ல எருவாகி நன்செய் நிலங்களை வளப்படுத்தும். ஆடுகள் பெருகி நல்ல வளம்தரும் எருவினை நல்கும். மற்றும் சோலைகளில் பழம்தரு மரங்கள் அதிகமாக இருப்பின் அதனாலும் நல்ல வருமானத்தைப் பெற வழி உண்டாகலாம். எல்லாவற்றிற்கு மேலாக சூடு அதிகமாகக் காணும் தமிழ்நாட்டில் சூடே காணாதபடி, நல்ல பொழில் சூழ்ந்த குளிர்ச்சியில் வாழ்க்கையினை அமைத்துக்கொள்ளலாம். தமிழ் நாட்டில் அத்தகைய சோலை சூழ்ந்த ஊர்கள் அக்காரணத்தாலேயே பேர்பெற்றுச் சிறக்கின்றன. ‘பைம்பொழில்’ என்ற பெயருடனேயே செங்கோட்டைக்கு அடுத்து ஓரூர் இன்னும் அழகுடன் பொலிகின்றது. மாலிருஞ் சோலையும், பூந்தோட்டமும் அவற்றின் சோலையாலும் தோட்டத்தா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/200&oldid=1382248" இலிருந்து மீள்விக்கப்பட்டது