பக்கம்:தொழில் வளம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

தொழில் வளம்


வருகின்றது, என்றாலும் இன்னும் நாம் மேலே காட்டியபடி சமுதாயமும் அரசாங்கமும் சேர்ந்து பல துறையில் இத்தொழிலை முன்னுக்குக் கொண்டு வரக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் உழவுத் தொழிலுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உதவக்கூடியன. இவையன்றி அக்கிராம மக்கள் வாழ்க்கைத்தரம் உயரவும் வாழ்வின் தேவைகள் நிறைவு பெறவும் செய்யவேண்டிய வேலைகள் பல நமது அண்மையிலுள்ள, தமிழர் பெரும்பாலராக வாழ்கின்ற இலங்கை, மலேயா முதலிய நாடுகளைக் காணின் ஒவ்வொரு கிராமமும் கல்வி, நலத்துறை போன்ற எல்லாவற்றிலும் தன் நிறைவு பெற்றனவாகவே உள்ளன. நாம் மேலே கண்டபடி ‘பதியெழு வறியாப் பழங்குடி’ மக்களாகவே அவர்கள் வாழ்கின்றார்கள். ஆனால் நம் நாட்டில் மட்டும் பல கிராமங்கள் நாள்தோறும் சீரழிந்து நிலைகெட்டுவர நகரங்கள் வளர்ந்து கொண்டேயிருப்பதைக் காண்கின்றாேம். வாழ்வின் அடிப்படைத் தேவைகள் அத்தனையும் அவ்வூர்களிலிருந்தால் ஏன் சென்னைநகர் தேடிப் பல ஏழைக் கிராமமக்கள் நாள்தோறும் வந்துகொண்டே யிருக்கிறார்கள்? சில செல்வர்கள் எத்தனையோ பல காரணங்களுக்காக வரலாம். ஆனால் ஏழைகள் அடிப்படை வாழ்வுக்காக உணவு, உடை, உறையுள் இவை காரணமாகத் தானே ஊர்விட்டு ஓடி வருகிறார்கள். இந்த நிலையைத்தடுக்க வேண்டுமென அரசாங்கத்தார் அடிக்கடி கூறுகின்றார்கள். ஆனால் அதற்கேற்ற வகையில் செயலாற்றவேண்டும். நம் தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கிராமங்களும் அடிப்படைத் தேவைகளில் தன் நிறைவு கொள்ளவேண்டும். அதுவரையில் சிலகாலம் நகரங்களின் வளர்ச்சி தடைபடினும் படுக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/203&oldid=1382216" இலிருந்து மீள்விக்கப்பட்டது