பக்கம்:தொழில் வளம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவுத் தொழில்

179


மிகவும் வருந்துகிறார்கள். செப்பம் செய்த பெருஞ்சாலைகளையும், நெடுஞ்சாலைகளையும் திரும்பத் திரும்பச் செப்பனிடும் காட்சி நாம் காண்பதாகும். அவற்றை யெல்லாம் வேண்டாமென்று யாரும் சொல்லமாட்டார்கள். சமதர்மச் சமுதாயம் இச்சாலைகளையும் பொருந்தியதாக வேண்டுமென்பதே நம் கருத்து. பல பெரிய கிராமங்கள்கூடச் சரியான போக்குவரத்துச் சாலைகள் இல்லாமல் திண்டாடுகின்ற வேளையில் அதைக் கவனிக்காது விட்டால் கிராமங்கள் வளர்வது எங்கே? உயிர் நாடியாகிய கிராமங்கள் வாடினால் நாட்டு வாழ்வு மலர்வதெங்கே ? எனவே அரசாங்கத்தார் கிராமச் சாலைகளுக்கு அதிகமாகச் செலவு செய்தல் வேண்டும். நம் மாநிலத்தில் கிராம ரோடுகள் பத்து ஆண்டுக்ளுக்குமுன் 6800 மைல் இருந்தன என்றும் பிறகு 2,850 மைல் மண் சாலைகள் போடப்பட்டன என்றும் அரசாங்கக் கணக்கு சொல்லுகிறது. உண்மை தான்! இந்தச் சாலைகள் நாட்டுக் கிராமங்களை இணைக்கப் போதுமா? கப்பியிட்ட கிராமங்கள் வழியாகச் செல்லும் சில சாலைகளும் உள்ளன என்பது உண்மைதான். என்றாலும் அச்சாலைகளைச் சென்றடைய இணைப்புச் சாலைகளாகக் கிராமங்களைச் சேர்க்கும் சுமார் 10,000 கல் தொலைவுள்ள மண் சாலைகளை உடனடியாகச் செப்பம் செய்யவேண்டும். இன்னும் இதுபோல் இரண்டு அல்லது மூன்று மடங்கு சாலை அமைத்தால்தான் எல்லா ஊர்களும் ஓரளவு போக்கு வரவு நிலையில் வளர்ச்சியடைந்ததாகக் கொள்ள முடியும். இந்த வழியில் அரசாங்கம் அதிகம் கருத்திருத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

நாட்டின் உயிர்காடியாகிய உழவுத் தொழில் இன்றைய நிலையில் நல்ல நிலையில் வளர்ச்சி அடைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/202&oldid=1382227" இலிருந்து மீள்விக்கப்பட்டது