பக்கம்:தொழில் வளம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. நெய்தல் தொழில் – கைத்தறி


மக்கள் வாழ்விற்கு அடிப்படைத் தேவைகளைக் காணும் போது உணவு முதலாவதாகவும் உடை இரண்டாவதாகவும் இடம் பெற்றிருப்பதைக் கண்டோம். மனிதன் உயிர் பெற்ற உடன் வேண்டுவது உணவு; உணர்வு பெற்றபின் தேவைப்படுவது உடை. உணவே உயிரினும் ஓம்பப்பட வேண்டுவதாகும் என்று ஆன்றாேர்கள் கூறுவர். உயிரினும் நானே சிறந்ததென்றும் இரண்டில் ஒன்றைவிட வேண்டுமாயின் நாணினைக் காப்பாற்றி உயிரையே நல்லவர்கள் விட்டுவிடுவார்கள் என்றும் இலக்கியத்திலும் வரலாற்றிலும் வாழ்க்கையிலும் காண்கின்றாேம். அத்தகைய உயிரின் சிறந்த நாணினையும் உணர்வையும் காப்பாற்றுவது ஆடையாகும். ‘ஆடைஇல்லா மனிதன் அரைமனிதன்’ என்ற பழமொழி தமிழ் நாட்டின் பழைய மொழியாகும். இந்த ஆடையைத் தமிழ் நாட்டு மக்கள் வரலாறு உணரும் நாட்களுக்கு முன்பிருந்தே அறிந்திருந்தார்கள். நாம் இந்த நூலின் முதல் தலைப்பில் கண்டபடி இன்றைக்கு இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/205&oldid=1400501" இலிருந்து மீள்விக்கப்பட்டது