பக்கம்:தொழில் வளம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல் தொழில்-கைத்தறி

203


மக்கள் பட்டினும் மயிரினும், பருத்தியினும் பல்வேறு வகைப்பட்ட வண்ண ஆடைகளை உடுத்தியிருந்தார்கள் எனக் காண்கின்றாேம். எனவே தமிழ் நாட்டில் நெசவும் தொன்மைவாய்ந்ததாகும். இன்றும் பெரும் ஆலை நகர்களில் காண்பது போன்ற அளவிறந்த நிலையில் ஆடைகளைப் பலவகையில் பெருக்காவிட்டாலும் அன்றைய தமிழ் நாட்டில் மக்கள் - சிறப்பாகப் பெண்கள்- நல்ல வண்ண ஆடைகளை நெய்யக்கற்றிருந்தார்கள் என உணர்கின்றாேம். தமிழ் காட்டில் பெரும்பாலும் நெசவு ஊர்தோறும் வீடு தோறும் இருந்த ஒரு தொழில். தமிழ் நாட்டு மக்கள் அவரவர்களுக்கு வேண்டிய வாழ்க்கைப் பொருள்களை அவரவர்களே தயாரித்துக் கொண்டார்கள் எனக் கண்டோம். அந்த வகையில் ஆடையும் ஒன்றாக அமைந்தது எனக் காண்கின்றாேம். அந்த நிலை இன்னும் நம் நாட்டில் மறையாது நிற்கின்றது. அதையே நாம் இன்று கைத்தறி நெசவு என்று போற்றுகிறோம். இன்று அது வீடுதோறும் இல்லையென்றாலும், இந்தியாவை நோக்கத் தமிழ் நாட்டில் பெரும்பாலான மக்கள் கைத்தறிநெசவாலேயே வாழ்ந்து வருகிறார்கள். நெசவாளிகளின் வீடுகளில் ஆண்களும் பெண்களும்கலந்தே இந்தத்தொழிலைச் செய்வதை இன்றும் காண்கின்றாேம். பழங்காலத்தில் பெண்கள் பஞ்சியைத் துப்புரவு செய்து இழைத்து நூலாக்கித் தர ஆடவர் அவற்றை ஆடையாக நெய்வார்கள் போலும் இன்று கைத்தறி நெசவு பெருவாரியாக நடைபெற்று நகரங்களில் - பட்டு இழைகளையும், நூல் இழைகளையும் பக்குவப்படுத்தித் தரும் பணியைப் பெண்களே மேற்கொள்ளுகிறார்கள். இவற்றையெல்லாம் எண்ணியே இடைக்கால இலக்கணப் புலவர் இலக்கிய நூலுக்கும், நெசவு நூலுக்கும் தொடர்பு உண்டாக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/206&oldid=1400502" இலிருந்து மீள்விக்கப்பட்டது