பக்கம்:தொழில் வளம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

தொழில் வளம்


அழகான வெண்பாவையே பாடி விட்டுச் சென்றார்: பவணந்தியார் தம் நன்னூல் பாயிரத்தில்,

‘பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா – எஞ்சாத
கையே வாயாகக் கதிரே மதியாக

மையிலா நூல்முடியு மாறு’

என்று பாடியுள்ளார். எனவே, இழைத்து நூலாக்கிப் பாவோட்டி அமைக்கும் பணியைப் பெரும்பாலும் பெண்கள் செய்தார்கள் என அறிகின்றாேம். இன்றும் நெசவாளியின் வீட்டுக்கு நாம் செல்வோமாயின் ஆண் பெண் அனைவரும் – பல குடும்பத்தவரும் – ஒன்றுகூடி இந்த நெசவுத் தொழிலில் ஈடுபட்டு ஒற்றுமையாகத் தொழிலாற்றுவதைக் காண்கின்றோம். இங்கே தமிழ் நாட்டில் இன்று இந்தத் தொழில் – கைத்தறித் தொழில் எந்த நிலையில் உள்ளது என்பதை அத்துறையில் வல்லவர் அறிந்துள்ள மதிப்பீட்டின்படியே காணலாம்.

நாட்டில் எத்தனையோ குடிசைத் தொழில்கள் வளர்ந்து வருகின்றன. குடிசைத் தொழில் அடிப்படையில் பார்த்தால் கைத்தறி பெரிய – முதலில், உண்டான – குடிசைத் தொழில் என்றும் சொல்லி விடலாம். நாட்டில் உள்ள ஏழை மக்களுள் பலரையும் வாழ வைப்பது இந்த நெசவுத் தொழிலேயாகும், இன்றும், காஞ்சிபுரம் ஈரோடு போன்ற பெருநகரங்களிலும் பல கிராமங்களிலும் நெய்தற்தொழில் சிறப்பாக நடைபெறுவதோடு அந்த மக்கள் வாழ்வுப் போராட்டத்துக்கும் வழி சொல்லும் ஒரு தொழிலாக அமைந்துள்ளது. எனவே தமிழ் நாட்டுத் தொழில் வளத்துள் “கைத்தறிநெசவு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/207&oldid=1400503" இலிருந்து மீள்விக்கப்பட்டது