பக்கம்:தொழில் வளம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

தொழில் வளம்


பெற்றுள்ளது. கடலூரில் நெசவுத் தொழிற்சாலை ஒன்றும் மதுரை, சென்னை, சேலம், நெல்லை ஆகிய விடங்களில் மாதிரி நெசவுச்சாலைகளும் (Pattern Weaving factories) இச்சங்கம் வைத்துத் தொழிலாற்றி வருகின்றது. ஆகவே பட்டினும், செயற்கைப் பட்டினும் பெருமளவில் பருத்தியினும் ஆடையை உற்பத்தி செய்யும் பெரும் கூட்டுறவு நிலையமாக இது விளங்குகின்றது.

இவ்வளவை உற்பத்தி செய்து விட்டு இது விற்பனைக்கு வழிகாணா விட்டால் என்னாவது? எனவே உற்பத்தியாகும் பொருள்களை விற்கத் தக்க எல்லா ஏற்பாடுகளையும் இது செய்து வருகின்றது. முன்னூறுக்கு மேற்பட்ட விற்பனைக் கடைகள் நாட்டின் பல பாகங்களினும் இதன்வழித் தொழிற்படுகின்றன. சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டொன்றுக்கு இவற்றின் வழியே விற்பனை நடந்து வருகின்றது. தமிழ் நாட்டுக்கு வெளியிலேயும் இந்தியாவுக்கு வெளியிலேயும் பல விற்பனை நிலையங்களை இது அமைத்துள்ளது. மற்றும் பல நாடுகளுக்கு இது கைத்தறித் துணிகளை ஏற்றுமதி செய்கின்றது. சில சமயங்களில் விற்பனை ஆகாது பொருள்கள் தேங்கிக்கிடக்கும்போது அரசாங்கம் கடன்கொடுக்க முன் வந்து நெசவாளிகள் வேலை குறைபடாதிருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளுகின்றது. தமிழ் நாட்டில் சுமார் ஆயிரம் அடிப்படைக் கூட்டுறவு நெசவுச் சங்கங்களும் இரண்டு இலட்சம் தறிகளும் உள்ளன. இவை அனைத்தும் கூட்டாக ஒரே குடும்பமாக நாட்டின் தேவையான அடிப்படைத் தேவையான ஆடையினைச் செய்து நல்கும் பணியினை மேற்கொள்ளுகின்றன. இந்தியாவிலேயே இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/211&oldid=1400507" இலிருந்து மீள்விக்கப்பட்டது