பக்கம்:தொழில் வளம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல் தொழில்-கைத்தறி

209


போன்ற பெருங் கூட்டுறவு நிலையம் வேறு இல்லை எண்லாம். இத்துணைப் பெருமளவு உதவிகளைப் பெற்ற போதிலும் சில ஆண்டுகளில் எதிர்பாராதபடி பெரும்.தொல்லைகள் உண்டாகின்றன. அவைபற்றிப் பின் காணலாம். இனி இந்தக் கூட்டுறவுச் சங்க அடிப்படையிலும் பிறவகையிலும் தமிழ் நாட்டில் வளர்ந்து வரும் இக் கைத்தறித்தொழில் பற்றிய விவரங்களைக் தொடர்ந்து காணலாம்.

இந்திய நாட்டுத் திட்டங்களின் அடிப்ப்டையில் இத்தொழிலுக்கும் ஓரளவு பாதுகாப்பும் பொருள் உதவியும் இருந்து வருகின்ற்ன. வளர்ந்து வருகின்ற நெசவு ஆலைகளுடன் இத்தொழில் போட்டியிட முடியாது என்பதை அறிந்து, ஆலைகளிடம் இதன் உதவிக்கென ஓரளவு ‘செஸ்’ என்ற் பெயரில் வரி வசூல் செய்து, அதைக் கைத்தறி வள்ரக் கொடுத்து உதவுகிறார்கள். அந்தத் தொகையே பெரும்பாலும் கைத்தறி ஆடையில் தள்ளுபடிக் கணக்காக வ்ரும் தொகையாகும். இக் கைத்தறிக்கு அடிக்கடி சரிவு நேர்தல் இயற்கையாக அமைந்துவிட்ட்து. ஒரு பத்தாண்டுகளுக்குமுன் இத்தொழிலில் உண்டான பெரு மந்த நிலையும் அதனால் நெசவாளிகள் வாடி வருந்தித் தெருதோறும் பிச்சை ஏற்ற காட்சியும் இன்னும் தமிழ் மக்கள் கண்ணிலிருந்தும் கருத்திலிருந்தும் மறைந்திருக்க வழியில்லை; அத்தகைய கொடிய நிலையிலிருந்து மெல்லத் தப்பி இன்று சற்று நன்றாகவே வளர்ச்சி பெற்றுள்ளது எனலாம். அந்தக் காலத்தில் நாட்டின் இப் பழந்தொழில் அடியோடு நசித்துவிடுமோ என்று அஞ்சக்கூடிய பெருநிலையே உண்டாகிவிட்டது. எனினும் இத்துறையில் செயலாற்றிய நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/212&oldid=1381481" இலிருந்து மீள்விக்கப்பட்டது