பக்கம்:தொழில் வளம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல் தொழில்-கைத்தறி

211


கைத்தறி நன்கு வளர்ச்சி யடைந்தே வந்துள்ளது. 1952ல் 110 கோடி கஜம் உற்பத்தி செய்த கைத்தறித் தொழில் 1959ல் 186 கோடி கஜம் துணியை உற்பத்தி செய்தது என்றால் அதன் வளர்ச்சி மிகப் பெரிய ஒன்று தானே!

இத்துணை வளர்ச்சி யடைந்த போதிலும் உள்நாட்டு வெளிநாட்டு வாணிபத் துறைகளாலே அவ்வ்ப்போது குறை நேர்வதைக் காண்கிறோம். சீன நாட்டொடு கொண்டிருந்தவெளிநாட்டுவாணிபம் பேரளிவு பாதிக்கப் பட்டதோடு உள் நாட்டிலேயும் ஆலை உற்பத்திப் பெருக்கத்தாலும் இதன் வளர்ச்சி தடைப்படுகிறது. வேறுபிற வெளிநாடுகளில் நடைபெற்றுவந்த வியாபாரமும் பலவகைகளில் குறைபட்டுள்ளது. மக்களின் மனமறிந்து பல்வேறு வகைகளிலும் பல்வேறு வண்ணங்களிலும் ஆடைகளை உற்பத்தி செய்தாலும்,ஆலை வளர்ச்சியின் போட்டியினால் அதிகம் வளர்ச்சியில்லை. எனவே இதற்கு நிலைத்த தீர்வுகாண வேண்டுமென விழைகின்றனர். ஆடை வகைகளுள் வேட்டி, புடவை இரண்டு ரகங்களையும் தனியாகப் பிரித்துக் கைத்தறிக்கு ஒதுக்கி விட்டால் இதற்கு ஓரளவு விடிவு காலம் உண்டாகும் என்பதே அத்துறையில் உள்ளவர் தம் முக்கிய நோக்கமும் கருத்து மாகும். நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் இத் துறை ஓரளவு சிறக்கத் தொழிலாற்ற வேண்டுமானல் உண்மையிலே இது நன்கு அரசாங்கத்தாரால் பாதுகாக்கப்படவேண்டும்.

அகன்ற பாரத நாட்டில் இக் கைத்தறித் தொழில் சிறந்திருந்தாலும் இதில் பெரும்பாகம் தமிழ் நாட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/214&oldid=1381757" இலிருந்து மீள்விக்கப்பட்டது