பக்கம்:தொழில் வளம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

தொழில் வளம்


தான் உள்ளது. இந்தியாமுழுவதுக்கும் சுமார் 27 லட்சம் தறிகள் உள்ளன. அவற்றுள் 12 லட்சம் தென்னாட்டில் உள்ளன. அவற்றுள் சுமார் ஐந்து லட்சம் தறிகள் தமிழ் நாட்டிலேயே உள்ளன. இந்த ஐந்து லட்சம் தறிகளை நம்பி இருபத்தைந்து லட்சம் மக்கள் வாழ்ந்து நாட்டின் தேவைக்கும் உதவுகிறார்கள். எனவே கைத்தறித் துறையில் தமிழ்நாடு மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றது. முதல் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் இந்திய அரசாங்கம் ஏற்படுத்திய சில திட்டங்களாலும் ‘கனுங்கோ - கமிட்டியார்’ வரையறுத்ததன் முறைகளாலும் இத்துறைக்குச் சிலவகையான நெசவுகள் ஒதுக்கப்பட வேண்டு மென்று தீர்மானிக்கப்பெற்றது. கைத்தறி நெசவாளிகள் ஆண்டொன்றுக்கு முன்னூறு நாளைக்கு வேலைபெறும் அளவுக்கு இத்தொழில் கட்டாயம் பாதுகாக்கப்பெற வேண்டுமெனக் ‘கனுக், கமிட்டி’ சிபார்சு செய்தது என அறிகிறோம்.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் திட்டக் கமிஷனால், அனைத்திந்திய அடிப்படையில் அமைக்கப்பெற்ற ‘கார்வே கமிட்டி’யினால் செய்யப்பட்ட சிபார்சாலும் பெரும் ஆலைத் தொழிலுக்கும் சிறு கைத்தறித் தொழிலுக்கும் இடையில் உண்டாக்கப் பெறும் ஒப்பந்த வகையில் சில நல்ல முடிவுகளைப் பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. கைத்தறித் தொழிலாளர்கள் தங்கட்கு வேட்டி, புடவை , நெய்யும் முழு உரிமையையும் ஒதுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டே வற்புறுத்தினர். அத்துடன் உற்பத்தி நிலையிலும் சில வரையறைகள் செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தனர். அவர் தம், கோரிக்கைகள் முழு அளவில் வெற்றி தரவில்லை; என்றாலும் ஓரளவில் சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/215&oldid=1381797" இலிருந்து மீள்விக்கப்பட்டது