பக்கம்:தொழில் வளம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல் தொழில்-கைத்தறி

213


வரையறைகள் செய்யப்பெற்றன. அதன் நிலை வருமாறு:

இந்திய நாட்டில் இரண்டாம் திட்ட இறுதிக் காலத்தில் 40. கோடி மக்கள் இருப்பார்களென்றும் ஆளொன்றுக்கு 18½ கெஜம் தேவையாக இருக்கு மென்றும், அக்கணக்கின்படி நாட்டுக்கு 740 கோடி கெஜம் துணி உற்பத்தியாகவேண்டுமென்றும் கணக்கிடப் பெற்றது. அந்த அளவிலும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கு 100 கோடி கெஜம் அதிகமாகத் தேவைப்படும் எனவும் கணக்கிட்டனர். இந்த 840 கோடி கெஜத்தில் ஆலைகளுக்கு 500கோடியும் கைத்தறிக்கு 150 கோடியும் விசைத்தறிக்கு 20 கோடியும் நெய்ய வேண்டுமெனக் கணக்கிட்டனர். மிகுதியும் கைத்தறிக்கே வேறு வகையில் வரையறுக்கப்பெற்றது.

முன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்த அளவு கூடுதலாயிற்று. 43 கோடிக்கும் மேலாக, மக்கள் வாழ்வார்களெனவும் அவர்கள் ஆளுக்கு 20.3 கெஜம் ஆடை பெறுவார்களெனவும் கணக்கிட்டு, மொத்தம் 960கோடி கெஜம்.துணி தேவையாகும் எனக் கணக்கிட்டார்கள். அதை,

ஆலைகளுக்கு 630 கோடி
கைத்தறிக்கு 250
விசைத் தறிக்கு 50
அம்பர் சர்க்காவுக்கு 20

எனப் பிரித்துள்ளார்கள். எனினும் இந்த அளவும் கணக்கில் சரியானதாகாது என அத்துறையில் வல்லவர்கள் காட்டுகிறார்கள். மக்கள் வாங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/216&oldid=1399748" இலிருந்து மீள்விக்கப்பட்டது