பக்கம்:தொழில் வளம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

தொழில் வளம்


திறன் வளர்ச்சியடையாத காரணத்தால்.20.3 கெஜம் தனி மனிதருக்கென்று கணக்கிடப் பெற்றதாகும் என்றும், கைத்தறிக்கு 400 கோடி கெஜமாவது ஒதுக்கப்பெற வேண்டுமென்றும் அவர்கள் சொல்லுகிறார்கள். எனவே இன்னும் இத்துறை வல்லவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இது பற்றிய ஆய்வு நிலை நீடித்துக்கொண்டே இருக்கிறது. பல துறைகளின் வளர்ச்சிக்கு உதவிய இக் கைத்தொழிலுக்கு இன்னும் - இத்தொழில் நிலைத்து யாதொரு இடர்ப்பாடும் இல்லாதவகையில் உதவவேண்டுமென இத் துறையில் வல்ல தலைவர்கள் இன்னும் தமிழ்நாட்டு அரசாங்கத்தையும் மத்திய அரசாங்கத்தையும் வேண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் 1958-ல் இந்திய அரசாங்கம் அமைத்த D. S. ஜோஷி, (D. S. Joshi I.C.S.) கமிட்டி இத் துறையை நன்கு ஆராய்ந்து சில கருத்துக்களை வெளியிட்டது. இத் துறையில் உண்டாகும் தேக்க நிலையை ஆராய்ந்து இத் தேக்கநிலை வருங்காலத்தில் உண்டாகாதிருக்க வேண்டிய வழித்துறைகளை ஆராய்ந்தது. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்ட இறுதியில் தனிமனிதர் உபயோகத்துக்கு 18.5 கெஜம் எனக் கணக்கிடப்பட்டது அதிகமெனவும் 16.7 கெஜமே சரியாகும் எனவும் கண்டுள்ளது. அதன் முடிவு. ஆலைகள் 500 கோடி கெஜத்துக்கு அதிகமாக உற்பத்தி செய்யக்கூடாது என்று வரையறை செய்தாலொழிய கைத்தறிக்கு வளர்ச்சி இல்லை என்பதாகும்.

வெளிநாட்டு வாணிபமும் இத்துறையில், அவ்வளவு வளம் பெற்றதாக இல்லை. 1957-ல்,828.கோடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/217&oldid=1381828" இலிருந்து மீள்விக்கப்பட்டது